தூத்துக்குடி மாணவன் சாதனை…தமிழக டேக்வாண்டோ அணிக்கு தேர்வு…!!
தூத்துக்குடி ஸ்ரீகாமாஷி வித்யாலயம் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவன் A.தினேஷ் தமிழக டேக்வாண்டோ அணிக்கு தேர்வாகியுள்ளார்…
இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி இந்த மாதம் 10ஆம் தேதி தருமபுரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள பல்லை மாணவர்கள் என மொத்தம் 500 பேர் பங்கேற்றனர்.
இதில் தூத்துக்குடி ஸ்ரீகாமாஷி வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 4 மாணவர்கள் பங்கேற்றனர்.அதில் 12ஆம் வகுப்பு மாணவன் A.தினேஷ் 78கிகி மேற்பட்டோருக்கான எடை பிரிவில் முதலாம் இடம் பெற்றார்.வெற்றி பெற்ற மாணவன் A.தினேஷ் மத்திய பிரதேஷத்தில் நடைபெற உள்ள தேசிய டேக்வாண்டோ போட்டியில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார்.அதே போல J.நமசிவாயம் இரண்டாமிடமும் ,J .செல்வா மற்றும் ரிஷிகேஷ் மூன்றாமிடமும் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழக அணிக்காக விளையாட தேர்வாகிய மாணவனின் பெற்றோர்களான ஆறுமுகம் , சுயம்பு தம்பதிகளை அனைவரும் பாராட்டி வந்தனர்.இதில் மாணவன் A.தினேஷின் தந்தை ஆறுமுகம் பெயின்டிங் காண்ட்ராக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ,பயிற்சியாளர் , பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளிக்கு தூத்துக்குடி மாவட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
dinasuvadu.com