"தூத்துக்குடி மக்களின் உயிரை காவு வாங்க காத்திருக்கும் மின்சாதன பெட்டி"மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்..!!
தூத்துக்குடி AVM மருத்துவமனை முன்பு உயிருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் உள்ள மின்கடத்தி (டிரான்ஸ்பார்ம்) பெட்டியை அப்புறப்படுத்த வேண்டி மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
தூத்துக்குடி , திருநெல்வேலி சாலையில் உள்ள AVM மருத்துவமனை எதிர்புறம் உள்ள மின்கடத்தி(டிரான்ஸ்பார்ம்) பெட்டி மழை நீரில் சேதமடைந்து மிதக்கிறது.இதனால் சாலையில் நடந்து செல்லும் மக்களுக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அதை உடனே சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் தா.ராஜா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் இந்த மின்கடத்தி இருக்கும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர்.இதற்க்கு எதிர்புறம் மருத்துவமனைக்கு தினமும் மக்கள் வந்து செல்கின்ற்றனர். அருகே காய்கறி மார்க்கெட் , பழைய பேருந்து நிலையம் என தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்லக்கூடிய சாலை அருகே இப்படி சேதமடைந்து கிடப்பதை மின்சார வாரியம் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.கடந்த இரண்டு , மூன்று நாட்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருப்பதால் சாலை ஈரப்பதத்துடன் இருக்கிறது இதனால் மக்கள் அந்த சாலையில் நடக்க பயந்து பயந்து செல்கின்றனர் எனவே உயிருக்கு கேள்விக்குறியாக காத்திருக்கும் மின்கடத்தி(டிரான்ஸ்பார்ம்) பெட்டியை உடனே சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
DINASUVADU