தூத்துக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய சிறுவன் பரிதாபமகா உயிரிழப்பு!

Default Image

சிகிச்சை பலனின்றி கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சிறுவன்  பரிதாபமாக உயிரிழந்தான்.

தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் சாலையை சேர்ந்தவர் லாரன்ஸ் ராஜதுரை. ஆவல்நத்தம் பகுதியில் இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. ஆலையின் முன்பகுதியில் தீப்பெட்டி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த கழிவுகளில் திடீரென தீப்பற்றியுள்ளது. அதன் அருகே அதே ஊரைச் சேர்ந்த சிறுவன் பத்ரகாளி முத்து விளைக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் மீது தீ பற்றியுள்ளது.

அப்போது அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்