தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 300 பேர் கைது.!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் நுழைவு வாயில் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக போராட்டத்தில்  சில்வர்புரம்,மடத்தூர், முருகேசன் நகர்,பாலையாபுரம்,சுப்ரமணியாபுரம்,தெற்கு வீரபாண்டியாபுரம்,  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 64 நாட்களுக்கு மேலாக  போராடி வருகின்றனர்.

 

இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் நுழைவு வாயில் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் முற்றுகை போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்