தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….!
ஏப்ரல் 4-ம் தேதி தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காவல் துறை இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி, தூத்துக்குடி எம்எல்ஏ பெ.கீதா ஜீவன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று காலை அவசர மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திமுகவின் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாலை 5 மணியளவில் திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.