தூத்துக்குடியில் ரூ. 1 கோடி மகளிர் குழுக்களுக்கு கடன் தருவதாக மோசடி!
தனியார் நிதி நிறுவனம் மீது,தூத்துக்குடியில் மகளிர் குழுக்களுக்கு கடன் தருவதாக கூறி, ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆழ்வார் திருநகரியில் ரவி, காசிராமன் ஆகியோர் நடத்திவரும் நிதி நிறுவனம், பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் கடன் வழங்குவதாக அறிவித்து, பலரை உறுப்பினராக சேர்த்துள்ளது. அவர்களிடம் முன்பணமாக தலா 3,200 ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
ஆனால், சொன்னபடி கடனும் தரவில்லை, செலுத்திய முன்பணமும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வந்தபோது, நிதி நிறுவன உரிமையாளர் காசிராமன் அவர்களை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மோசடி புகார் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.