தூத்துக்குடியில் மீனவர்களுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சி ஆர்பாட்டம்
தூத்துக்குடியில் மத்திய அரசையும், மாநில அரசுகளையும் கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரவேண்டும். மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை தேட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஓகி புயலின் கோர தாண்டவத்தால், கன்னியாகுமரி, தூத்துக்குடி மீனவர்கள் பலர் காணாமல் போயினர். இவர்கள் பலர் இன்னும் வீடுதிரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் இறந்தும் அவர்களின் உடல்கள் கிடைக்காமல் உள்ளன. அவர்களை தேடும் பணியில் மதிய, மாநில அரசுகள் கடும் மெத்தன போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். இதனை கண்டித்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் அனைத்து கட்சி சார்பில் மீனவர்களுக்கு ஆதரவாக மபெரும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிக்க மத்திய மாநில அரசுகள் காட்டி வரும் மெத்தன போக்கை கைவிட வலியுறித்தியும், கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி மீனவர்களின் குடும்பத்துக்கு ஆதரவு சொல்லவோ, அந்த பகுதியை ஆய்வு செய்யவோ தூத்துக்குடிக்கு வரவில்லை இதனை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் முழக்கங்கள் ஏழுப்பப்ப்பட்டன.
ஏற்கனவே தூத்துக்குடியில் 5 மீனவர்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் ஒருவரது உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. மீதம் உள்ளவர்கள் நிலை என் என்று தெரியவில்லை. அதனை விரைந்து முடிக்க வலியுறித்து போராட்டம் நடந்து வருகிறது.