தூத்துக்குடியில் சாலை கேட்டு நூதன போராட்டம் நடத்தி அசத்திய DYFI…!!

Published by
Dinasuvadu desk

தூத்துக்குடி P&T காலனியில் சாலையை அமைத்துக் கொடுக்க வேண்டி வாழைக்கன்று நட்டி நூதனமாக  DYFI சார்பில்  போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான P&T காலனியில் 25 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனர்.கொஞ்சமாக மழை சாரல் வந்தாலே மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி விபத்தை உண்டாக்கும் அளவுக்கு மாறி விடுகிறது.அது மட்டுமில்லாமல் சகதியில் தேங்கி கிடைப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  P&T காலனி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் , பல கட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகம் சாலைப்போடும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்தனர்.இதனால் அந்த பகுதியில் காவல்துறை வரவழைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் MS.முத்து தலைமையில் பொதுமக்கள் மற்றும்  வாலிபர்கள் மாநகராட்சின் அவலத்தை கண்டித்தும் , சாலை வசதி அமைத்திட வேண்டி  சேறும் சகதியுமாக உள்ள சாலையில் வாழைமரம் நட்டி நூதனமான போராட்டம் நடத்தினர்.அப்போது அமைத்து கொடு அமைத்து கொடு சாலை வசதி அமைத்து கொடு என்றும், சாலை  அமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ( DYFI ) மாவட்ட செயலாளர் MS.முத்து தலைமை தாங்கினார். மாநகர தலைவர் ஜித் காஸ்ட்ரோ முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் கண்ணன் , மாநகர நிர்வாகிகள் அருண் , முத்துகிருஷ்ணன் , ஜெம்ஸ் , பாலா மற்றும் மாதர் சங்கம் நிர்வாகி கமலம் மற்றும்  P&T பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
DINASUVADU 

Recent Posts

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்தது எப்படி.? மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

16 seconds ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

10 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

11 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

12 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

13 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

14 hours ago