தூத்துக்குடியில் குழந்தை இறந்து பிறந்தது..!! மருத்துவர்கள் இல்லாததே காரணம் உறவினர்கள் குற்றச்சாட்டு .
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் உள்ள கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் டாக்டர் இல்லாததே காரணம் என அந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
கடம்பூர் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி (வயது 23). கர்ப்பமாக இருந்த இவர் கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு நேற்று குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில் செல்வராணியை அவரது குடும்பத்தினர் கடம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது பணியில் டாக்டர் இல்லை. செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். தொடர்ந்து செல்வராணியை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
நேற்று அதிகாலை 3.45 மணியளவில் செல்வராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து டாக்டர் இல்லாத காரணத்தால் செல்வராணிக்கு செவிலியர்களே பிரசவம் பார்த்தனர். இதில் செல்வராணிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து செல்வராணியின் உறவினர்கள் கூறுகையில்,
டாக்டர்கள் இல்லாததால் நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்ற்றோம் என்று கிளம்பிய போது டாக்டர் வந்து விடுவார் என்று கூறி செவிலியர்கள் டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்ததே குழந்தை இறப்புக்கு காரணம் என்றனர்.எனவே அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத டாக்டர் மீதும், கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர்கள் மீதும் நடவடிடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்..
டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்து குழந்தை இறந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
dinasuvadu
ReplyForward
|