தூத்துக்குடியில் ஆண்கள் தின கொண்டாட்டம்
தூத்துக்குடி மீன்வளகல்லூரி வளாகத்தில் மாணவர் சங்கம் சார்பில் ஆண்கள் தினம் கொண்டாடபடுகிறது.இதில் மாணவர் பால் நத்தானியேல் வரவேற்று பேசினார். ஆண்கள் தினம் கொண்டாடுவதின் முக்கியத்துவத்தை மாணவர் குருபிரசன்னா விளக்கி பேசினார். மாணவர் சங்க துணைத்தலைவர் ஆதித்தன் பேசினார். கல்லூரி முதல்வர் சுகுமார் தலைமை வகித்தார். இதையொட்டி, ‘இன்றைய சூழ்நிலையில் ஆண்களின் நிலை ஆளுமையா? அடிமையா?’ என்ற தலைப்பில் நடந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் நீதிச்செல்வன் நடுவராகச் செயல்பட்டார். இதில் 2ம் ஆண்டு மாணவர் கணேஷ்குமார், முதலாம் ஆண்டு மாணவி கயல்விழி சிறந்த பேச்சாளர்களாக தேர்வுசெய்யப்பட்டனர். ஆதித்தன் மற்றும் செல்வன் முத்துமாரியப்பன் ஆகியோர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தலில் இவ்வாண்டின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் அதிர்ஷ்டசாலியாகவும், மாணவர்களில் அதிர்ஷ்டசாலியாகவும் முறையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவர் சங்க இணைச் செயலாளர் செல்வன் பாபுகணேஷ் நன்றி கூறினார்.