திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் வாங்கும் பிரசாத பொருட்களில் கெட்டுப்போன நிலையில் விற்பனை செய்யப்படுவதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் மார்கழி மாதம் என்பதாலும் இங்கு தினத்தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அரிசிமாவுடன் சர்க்கரை வெள்ளம் கலந்து செய்யப்படும் ‘புட்டமுது’ என்னும் பிரசாத பொருளினை விரும்பி வாங்கி செல்வது வழக்கம். அவ்வாறு வாங்கும் அந்த மாவு பொருளில் இருந்து துர்நாற்றம் வீசியதாகவும், அதை சாப்பிட்ட பலருக்கு வாந்தி மயக்கத்துக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. கடந்த 9-ம் தேதி தயாரிக்கப்பட்ட இந்த மாவு பொருட்களில் 3 மாதத்திற்கு கெட்டுபோகாது என ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது கூடுதல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
உணவுப்பொருள் ஒழுங்குமுறை சட்டம் 2011-ன் படி பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருளில் ஸ்டிக்கர் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். எனவே, கோயிலில் உள்ள பிரசாத ஸ்டால்களில் உள்ள பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் குறித்து தீவிர சோதனை நடத்தி கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடல் நலன் காக்க திருச்செந்தூர் உணவுப்பொருள் பாதுகாப்பு துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…