தத்தெடுத்துள்ள கிராமத்தில் உள்ள பள்ளிக்கு 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய கனிமொழி எம்.பி !
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் பல வசதிகளை ஏற்படுத்துவது வழக்கம்.இந்நிலையில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. தான் தத்தெடுத்துள்ள பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரபுரம் என்ற கிராமத்தை திமுகவின் கனிமொழி எம்.பி. தத்தெடுத்திருந்தார்.அந்த கிராமத்துக்கும், அங்குள்ள மக்களுக்கும் தேவையான பல அடிப்படை வசதிகளை செய்தார். சில மாதங்களுக்கு முன்பு 68 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள குளம் தூர்வாருவதற்கு பாராளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து இல்லாமல், தன் சொந்த பணத்தில் இருந்தும், பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டியும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.
இந்நிலையில் ஆசீர்வாதபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை நன்கொடையாக அளித்தார்.