சாத்தான்குளம் மக்கள் பஸ் வசதி கேட்டு மனு..!!
நின்று போன மினி பஸ்சை நிரந்தரமாக இயக்க கோரி
சாத்தான்குளம் தாலுகா, அரசூர் கிராமம் மேட்டுவிளை பகுதி மக்கள் ஜமாஅத் தலைவர் காசிம் மற்றும் எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் காதர் மைதீன், செயலாளர் மைதீன்கனி, பொருளாளர் கௌது மைதீன் உள்ளிட்டோருடன் வந்து நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து அளித்த மனு அளித்தனர் அதில் :எங்கள் ஊர் வழித்தடத்தில் திசையன்விளை-பெரியதாழை செல்லும் மினிபஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அது எங்கள் ஊருக்குவராமல் மாற்றுப்பாதையில் சென்று வந்தது. தற்போது அந்த பாதையில் உயர்மட்டபாலம் பணி நடைபெற்று கொண்டிருப்பதால் மீண்டும் எங்கள் ஊர் வழியே சம்பந்தப்பட்ட மினிபஸ் இயங்கி வருகிறது. எனவே நிரந்தரமாக அந்த மினிபஸ் எங்கள் ஊர் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.