கோவில்பட்டியில் மணமக்களை வாழ்த்திய தமிழக துணை முதல்வர்..!!

Default Image
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம் நேற்று நடந்தது. இதில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம் நேற்று நடந்தது. இதில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமணம்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ–இந்திராகாந்தி தம்பதியர் மகன் அருண்குமாருக்கும், சென்னை தினகரன்–சாந்தி தம்பதியர் மகள் திவ்யாவுக்கும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று காலையில் திருமணம் நடந்தது. தொடர்ந்து கோகுலம் மண்டப வளாகத்தில் மணமக்களை வாழ்த்தும் நிகழ்ச்சி நடந்தது.துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இதில் அமைசர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் , அதிமுகவின் நிர்வகிக்கள் ,அரசியல் தலைவர்கள் , தொழில் அதிபர்கள் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்