தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.
சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடக்கிறது. சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஜெ.அன்பழகன் தலைமையில் அண்ணாசாலை முதல் தேனாம்பேட்டை வரையிலும், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேகர்பாபு தலைமையில் பெரம்பூர் சர்ச் அருகிலிருந்து பிராட்வே வரையிலும், சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாதவரம் சுதர்சனம் தலைமையில் மூலக்கடை முதல் ஸ்டான்லி வரைக்கும் சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் மா.சுப்ரமணியன் தலைமையில் சைதாப்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், கட்சிகளின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
வேலூரில் துரைமுருகன் தலைமையிலும், தஞ்சையில் வைகோ தலைமையிலும் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.
இதேபோல் தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமையில் அனைத்துகட்சியினர் உட்பட 1000 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்ட மனித சங்கிலி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர் . காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…