எல்லாரும் இனி ஹெல்மட் போடுங்க..!! ஹெல்மட் விழிப்புணர்வு.
செய்துங்கநல்லூர்,
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இப்பேரணிக்கு ஆர்.சி பள்ளித் தலைமை ஆசிரியை அமலா தலைமை தாங்கினார். எஸ்.ஐ.பாத்திமா பர்வீன், ரவிகுமார் முன்னிலை வகித்தார் . ஆசிரியர் ஸ்டாலின் இந்த விழிப்புணர்வு பேரணியை வரவேற்றார்.ஆர்.சி பள்ளியில் இருந்து பேரணியை இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் துவக்கிவைத்தார்.
ஹெல்மட் அணிய வேண்டும் , பைக்களில் ஹெல்மட் அணியாமல் செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வைகையில் நடைபெற்ற இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தை பேரணி சென்றடைந்தது.
இப்பேரணியில் ஆசிரியர்கள் சாரதா, சேசு ரத்தினம் மற்றும் செய்துங்கநல்லூர் புனித லூசியா நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் என திரளானோர் பங்கேற்றனர். தற்போது கோர்ட் இருசக்கர வாகனத்தில் பின் பக்கத்தில் உக்கார்ந்து செல்லும் இருவரும் ஹெல்மட் அணியவேண்டும் என்ற உத்தரவு குறிப்பிடத்தக்கது..
DINASUVADU