எங்களுக்கு இடம் வேண்டும் மக்கள் கோரிக்கை..!!
தூத்துக்குடி மாவட்டம் , வைகுண்டம் தாலுகாவில் உள்ள சந்தையடிதெரு, குருசு கோயில்தெரு, ஓடைப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில் , எங்கள் பகுதியில் 22 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். தற்போது புதிதாக வந்த வட்டாட்சியர், ஓடைபுறம்போக்கில் வீடு கட்டியுள்ளீர்கள். உடனே காலி செய்யுங்கள் என எங்களை வற்புறுத்தி வருகிறார்.நாங்கள் இந்த இடத்தை காலி செய்து விட்டால் மாற்று இடத்துக்கு எங்கே போவோம் எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். நாங்கள் தற்போது குடியிருக்கும் இடத்திற்கு எதிர்புறத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. எனவே அதை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.