அமைச்சர் செங்கோட்டையன் அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனம் பற்றிப் பேச மறுப்பு…!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டது குறித்த எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேசனல் பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மையத்தைத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர்.
இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பான எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். மற்றவர்களின் கருத்துக்களுக்குப் பதில் கூற அமைச்சர் ஜெயக்குமார் உள்ளார் என்று அவர் தெரிவித்துவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.