இனி வழக்கம் போல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி!! கோவிலில் தங்கத்தேர்!!! இயக்கப்படும் கோவில் நிர்வாகம்!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் மீண்டும் தங்கத்தேர் இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ந் தேதி கோவில் கிரி பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கிரி பிரகார மண்டபம் முழுவதையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதனால் கிரி பிரகாரத்தில் இயக்கப்பட்ட தங்கத்தேர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த பணி முற்றிலும் முடிந்த நிலையில் நாளை முதல் தங்கத்தேர் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்தீருங்கள்