தூத்துக்குடி : தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், நெல்லை பாபநாசம், மணிமுத்தாறு அணை ஆகிய அணைகள் கனமழை காரணமாக நிரம்பியது எனவும். இதனால் தண்ணீர் திறந்துவிடப்படுவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தகவலை பார்த்த மக்கள் சற்று அதிர்ச்சியுடன் உண்மையா அல்லது இது வதந்தியா? என குழப்பத்தில் இருந்தனர். இதனையடுத்து, இது வதந்தி செய்தி மக்கள் யாரும் கவலைப்படவேண்டாம் என […]
தூத்துக்குடி : மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 2024-25ம் நிதியாண்டில் “கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்குதல்” திட்டத்தின் கீழ் செயல்படுத்த மொத்தம் 105 எண்களுக்கு ரூ.7,000/- வீதம் ரூ.7.35 இலட்சம் மானியம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்புசெட்டுகளை இயக்கச் செல்லும் போது பாம்புக்கடி, விஷப்பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் […]
தூத்துக்குடி : வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (டிசம்பர் 12) பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்றும் கனமழை பெய்துள்ள நிலையில், நாளை விடுமுறை அறிவிப்பு. அதன்படி, தூத்துக்குடி கனமழை காரணமாக நாளை 13.12.2024 அன்று பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர […]
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும். இதன் காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை […]
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று 2 நாள் சுற்று பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். இன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் துணைமுதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பிறகு, குறிச்சி நகர் மெயின்ரோட்டில் உள்ள மைதானத்தில் தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட […]
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு சிலர் அன்பளிப்பு வழங்குவதற்காக பணம் கொண்டு வந்துள்ளதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை […]
தூத்துக்குடி : தேசிய அளவிலான கயாக் (Kayak) மற்றும் ஸ்டாண்ட் அப் பெடலிங் (Stand Up paddling) கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் இன்று தூத்துக்குடியில் உள்ள முத்துநகர் கடற்கரையில் தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலிருந்தும் 22 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இன்று தொடங்கிய இந்த கடல் சாகச போட்டிகளைத் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் […]
தூத்துக்குடி : நாளை (ஆகஸ்ட் 20-08-2024) செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அது எந்தெந்த இடங்கள் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட் பகுதிகள், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, ரெயில்வே ஸ்டேசன் ரோடு, எட்.டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, […]
சென்னை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி , முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ் அவர்களை, முதலமைச்சரின் இணை செயலாளராக நியமனம் செய்து தமிழக புதிய தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, தமிழக தலைமை செயலாளராக பொறுப்பில் இருந்த சிவதாஸ் மீனா ஐஏஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, […]
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கும் பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தற்காலிக பணியாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க எதுவாக பணியின் விவரங்கள் குறித்து தற்போது மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் வட்டார வள வல்லுநர் (BRP) மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் […]
தூத்துக்குடி: புதூர் பாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மீன் பதன ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 30 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தனியார் மீன் பதன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் மீன்களை பதப்படுத்தி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார வாகன தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர். மு க ஸ்டாலின் முன்னிலையில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்தனது. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி சில்லாநத்தம் […]
தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. வானிலை அறிவிக்கையின் படி, கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு […]
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலக தடகள ஆடைகள் மற்றும் […]
கடந்த மாதம் 17மற்றும் 18-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தூத்தூக்குடி , நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது தான் தூத்தூக்குடி , நெல்லை மாவட்டங்கள் பழைய நிலைமைக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவைகுண்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் போது சென்னை- திருச்செந்தூர் ரயில் சிக்கிக்கொண்டது. அந்த ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் தண்டவாளத்தின் வழியாக தாதன்குளம் கிராமத்திற்கு […]
தூத்துக்குடி: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா வரும் 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி மாத அமாவாசைகளில் பிறகு வரும் ஆறாம் […]