திருவாரூரில் விவசாயிகள் நல சங்க தலைவர் மீது வழக்குப்பதிவு!
திருவாரூர்: திருவாரூரில் சாலைமறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க செயலாளர் ராமமூர்த்தி உள்பட 165 விவசாயிகள் மீது கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பா சாகுபடிக்கு வெட்டாற்றில் முறை வைக்காமல் நீர் திறக்கக்கோரி கொரடாச்சேரியில் மறியல் போராட்டம் நடந்தது.
source: dinasuvadu.com