திருவாரூரில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் !

Published by
Venu

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூரில்  நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்று நன்னிலம் தாசில்தாரிடம் பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், கடந்த 20ஆம் தேதி  முதல் அமலுக்கு வந்தது. மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளின் கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு அறிவித்தது.
அரசு அறிவித்துள்ள விலையுயர்வின்படி கட்டணங்கள் கீழ்கண்டவாறு உயரும்:
புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்வு
மாநகர குளிர்சாதன பேருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்வு
புறநகர் விரைவுப்பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ.17 லிருந்து ரூ.24 ஆக உயர்வு!
வால்வோ பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.33லிருந்து ரூ.51 ஆக உயர்வு!
மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது!
குளிர்சாதனப்பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.27லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டது
தற்போது உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் 20% கூடுதலாக வசூலிக்கப்படும்!
சென்னையில் மாநகரப்பேருந்துகளுக்கு இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 அல்ல, ரூ.5
சென்னை மாநகரப் பேருந்தில் அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயில் இருந்து 23 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Recent Posts

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

5 hours ago

பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…

5 hours ago

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்… பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…

6 hours ago

என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து…

கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…

7 hours ago

பெண் உயிரிழந்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…

7 hours ago

ஜனவரி இறுதிக்குள் பொறுப்பாளர்கள் நியமனம்… மார்ச் முதல் விஜய் சுற்றுப்பயணம்.! தவெகவின் அடுத்தடுத்த நகர்வு…

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…

8 hours ago