திருவாரூர் மாவட்டம் அருகே தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வெண்ணவாசல், பருத்தியூர், காவாலக்குடி, நாளில்ஒன்று, கண்கொடுத்தவனிதம், விடயபுரம், முசிறியம், திட்டாணிமுட்டம், மேலராதாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்த கிராமங்களுக்கு தேவையான பாசனநீர் பாண்டவையாற்றில் இருந்து கிடைக்கிறது. இந்த நிலையில் பாண்டவையாற்றில் இருந்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த கிராமங்களில் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால் பயிர்கள் கருகி, மகசூல் இழப்பு ஏற்படும் என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
பாண்டவையாற்றில் இருந்து சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி வெண்ணவாசல் பாலம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024