கஜா புயலால் 4 மாவட்ட உட்பட பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களை காக்கும் பொருட்டு அரசு முகாம்களில் தங்கவைத்தது.இருப்பதற்கு வீடுகளின்றி வழியில்லாமல் முகாம்களில் தங்கி உள்ளோம்என்ற குரல் நம் நெஞ்சை கரைக்கிறது.மேலும் வீடுகளை இழந்தவர்களும்,பாதுகாப்பு கருதி புயலுக்கு முன்பும் தமிழக அரசு இவர்களை முகாம்களில் தங்கவைத்து. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நிவாரண முகாமில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.திருவாரூர் மாவட்ட கோமாளப்பேட்டையில் என்ற இடத்தில் முகாமில் தங்கியிருந்த பக்கிரியம்மாள்(65) என்கிற பெண் உயிரிழந்துள்ளார்.இது குறித்து அங்கு இருக்கும் […]
புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றது என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் உள்ளிக்கோட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் நிவாரணப் பொருட்களை வழங்கினார் .அதன் பின் அவர் கூறுகையில், மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக உடனடியாக ரூ 5,000 கோடி வழங்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மந்த நிலையில் நடக்கின்றது . தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் […]
திருவாரூர் மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில்,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னைக்கு இதுவரை 45 சதவீதம் குறைந்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்தது.வடதமிழகத்தில் பரவலாக அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்.தென் தமிழகத்தில் ஓரிரு […]
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை – ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார் மேலும் நிவாரண முகாம்கள் தவிர மற்ற கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். DINASUVADU
திருவாரூர் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் விழுந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை நாட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட […]
கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன்.அதன் பின்னர் அவர் கூறுகையில், டெல்டாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளதால் அறிவித்ததை விட மூன்று மடங்கு கூடுதலாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.கஜா புயல் பாதித்த பகுதிகள் 30 ஆண்டுகள் பின்தங்கி விட்டது என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக […]
தஞ்சை,திரூவாரூர்,நாகை ,புதுகோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மக்களுக்கு பெட்ரோல்,டீசல் தேவைக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் த்மிழத்தில் 4 மாவட்டங்களை உலுக்கி எடுத்துள்ளது.இதில் நாகை,தஞ்சை,புதுக்கோட்டை,திருவாரூர் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.இதனால் மாவட்டங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் தேவைக்கு சிரமப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய ஆயில்பெட்ரோலிய நிறுவனம் தன் பங்கிற்கு 4 மாவட்டங்களுக்கு உதவும் வகையில் உதவி எண்களை தெரிவித்துள்ளது.இந்த 4 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தேவைக்கு இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் தஞ்சை […]
அதிமுக பிரமுகர் பன்னீர் செல்வம் என்பவரது வீட்டில் டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் வகையில் மழை நீர் தேங்கி இருந்ததால், அந்த பகுதியில் டிஆர்ஓ சக்திமணி தலைமையில் டெங்கு கொசு ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர் பன்னீர் செல்வத்திற்கு 2 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டிஸ் வழங்கினர்.
தியாகராஜன் கோவில் காப்பகத்தில் சிலைகளை ஆய்வு செய்த பின் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறியதாவது, சிலைகளை பாதுகாக்கும் அறைகள் இதுவரை அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். சிலைகளை பாதுகாக்கும் அறைகள் அமைக்கப்படாதது பற்றி நீதிமன்றத்தில் முறையிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி தருன் தலைமையில் அமைக்கப்பட 3 பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல் வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் […]
சிபிஎஸ்இ தேர்வில் முதலாவதாக வந்து, குடியரசு தலைவர் விருது பெற்ற கல்லூரி மாணவியை ஹரியானாவில் சிலர் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயதுடைய மாணவி, கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்போது, 3 நபர்களால் வழிமறிக்கப்பட்டு, காரில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, ஒதுக்குப்புறமான இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்போது, அருகில் இருந்த வயலில் இருந்த சிலரும், மாணவியை 3 பேருடன் சேர்ந்து, மாறிமாறி கூட்டு பலாத்காரம் […]
திருவாரூர் மாவட்டத்தில் ஆறு களில் நீர்வரத்து குறைந்து விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்லாத தால் சம்பா பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ஆற்றுப் பாசனத்தை நம்பி சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணி நடைபெற்றுள்ளது. தெளிப்பு மற்றும் நடவு செய்து 30 நாட்களே ஆன பயிர்களே பெருமளவில் உள்ளன. அண்மையில் கேரளா, கர்நாடகா பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அதிக அளவு நீர்வரத்து […]
திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு நடுநிலைப் பள்ளிக்கு திருவள்ளூர் அருகே தலைக்காஞ்சேரி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் தாஸ் முறையாக பள்ளிக்கு வருவதில்லை என குற்றம்சாட்டியும் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரியும் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவாரூர் மாவட்டம் அச்சுதமங்கலத்தில் தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 22 மாணவ, மாணவிகள் காயமடைந்துள்ளனர்.மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிஅளிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதம்பாவூர் சிவன் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பொழிந்த மழையால் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்றார். அங்கு விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருத்துறைப்பூண்டி விளக்குடி கிராமத்துக்கு சென்றார். நீட் தேர்வால் மாரடைப் பால் பலியான கிருஷ்ணசாமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் […]
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதலால் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் குறித்து அமைச்சர்கள், […]
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூரில் நன்னிலம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்று நன்னிலம் தாசில்தாரிடம் […]