திருவாரூரில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன அறிவிப்பை வெளியிட போகிறார் என்ற பதட்டத்திலே மு.க.ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்தார். பின்னர் திமுக கட்சி பிரசாந்த் கிஷோர் தலைமையில் இயங்குகிற கார்ப்பரேட் கட்சி என்றும், அதிமுக மக்களுக்கான கட்சி என்றும் தெரிவித்தார்.
சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்ற இளைஞர்.பின்னர் சிறுமியின் தாய் கண்ட காட்சி. வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் ஆவார்.இவர் ஒரு தனியார் மருத்துவ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியில் நான்கரை வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.சிறுமியின் வீட்டு வழியாக செல்லும் தினேஷ்குமார் அடிக்கடி சிறுமியுடன் விளையாடுவர் […]
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்களை திருட முயற்சி நடைபெற்றுள்ளது. வேட்பு மனுக்கள் திருடும் முயற்சியானது திருவாரூர் அருகே அரங்கேறி உள்ளது.காவல்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 தேதி என இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுக்களை அந்த பதவிக்கு வேட்பாளர்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலக பூட்டை உடைத்து ஆவணங்களை திருட முயற்சி நடந்துள்ளது.திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் […]
மூதாட்டி ஒருவர் 20,000 பணத்திற்காக இரண்டு சிறுமிகளை விற்பனை செய்துள்ளார். சிறுமிகளை காப்பாற்ற காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றன. பெண் குழந்தைகள் சமீபகாலமாகவே பாலியல் சீண்டல்கள் குழந்தை தொழிலாளர்கள் என பல கொடுமைக்கு ஆளாகின்றன.இது மட்டும் இல்லாமல் பெண் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் கொடுமைகளும் நடந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற முதியவர் இடைத்தரகரிடம் தனது இரண்டு பேத்திகளையும் ரூபாய் 20,000 -த்தை பெற்றுக்கொண்டு விற்பனை […]
அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை 10 .30 மணிக்கு வெளியிடப்படும் என உச்சநீதிமன்றம் கூறியது.இதை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இறுதி தீர்ப்பு வழங்குவதால் பல மாநிலங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது .
பயங்கரவாதிகள் 6 பேர் தமிழ்நாட்டில் ஊடுருவியதாக வந்த தகவலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில மணிநேரத்திற்கு முன்னர், நாகூரில் சையத் அபுதாகீர் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீசார், அவரிடம் 2 மணிநேரத்துக்கும் மேலாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில், முத்துப்பேட்டையில் 10 […]
திருவாரூரில் உள்ள, தியாகராஜ சுவாமி கோவிலில் நேற்றுஆடிப்பூரவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கோவில் குருக்கள் முரளி அவர்கள், தேர் புறப்படுகையில் தீபாரதணை காட்டினார். பிறகு நடுஇரவில், தேரடிக்கு தேர் வந்தது. அப்போது தேரின் மேலே ஏறி அம்மனுக்கு தீபாராதனை கட்ட முற்பட்டார். அப்போது தேர் நகர்ந்ததால் முரளி குருக்கள் கீழே விழுந்தார். பிரதான சாலையில் விழுந்ததால் அதிகமாக அடிபட்டு ரத்தம் நிறைய வெளியேறியது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் […]
மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 18 தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து கட்சிகளுகளும், தங்களது தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், […]
மக்களை சந்திப்போம், மனங்களை வெல்வோம் என தனது பயணத்தை தொடங்கினேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதில் அவர் பேசுகையில், கிராமங்களே கோவில், தற்போது கோவிலுக்கு வந்ததை போல் உணர்கிறேன்.மக்களை சந்திப்போம், மனங்களை வெல்வோம் என தனது பயணத்தை தொடங்கினேன். பெரு நிறுவனங்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே எம்பி, எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் .பழைய காலத்தில் […]
திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், உலக தொழில் முதலீட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 201 முதலீட்டாளர்களிடம் இருந்து 125 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்றார். திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் […]
திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர், பழவேற்காடு, திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக கோரைக்குப்பம், அரங்கம் குப்பம், களங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் […]
மறைந்த நெல் ஜெயராமனின் உடல் இறுதிச்சடங்கிற்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. உடல் நல குறைவு காரணமாக நெல் ஜெயராமன் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இவருக்கு வயது 50 ஆகும். இந்நிலையில், இவருக்கு திரைப்பட நடிகர்களான சிவகார்த்திக்கேயன் மற்றும் கார்த்திக் ஆகியோர் உதவி செய்தனர். இதன் பின் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ‘நெல்’ ஜெயராமனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு ரூ.5 […]
நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு கட்டிமேடுவில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. உடல் நல குறைவு காரணமாக நெல் ஜெயராமன் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இவருக்கு வயது 50 ஆகும். இந்நிலையில், இவருக்கு திரைப்பட நடிகர்களான சிவகார்த்திக்கேயன் மற்றும் கார்த்திக் ஆகியோர் உதவி செய்தனர். இதன் பின் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ‘நெல்’ ஜெயராமனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சிகிச்சை பெற்று […]
சென்னையில் இருந்து நெல் ஜெயராமனின் உடல் அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடுவிற்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் நல குறைவு காரணமாக நெல் ஜெயராமன் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இவருக்கு வயது 50 ஆகும். இந்நிலையில், இவருக்கு திரைப்பட நடிகர்களான சிவகார்த்திக்கேயன் மற்றும் கார்த்திக் ஆகியோர் உதவி செய்தனர். இதன் பின் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ‘நெல்’ ஜெயராமனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் […]
புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் காலமானார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளை பெற்றுள்ள இவர், இதுவரை 169 அரிய வகை நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி நெல் […]
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1,675 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறுகையில், புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் குறைகளை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 1,675 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கியுள்ளது.புயலால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூரில் மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு கூறுகையில், புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை முடித்த பின், மீண்டும் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்ற பின் மத்திய அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வோம் என்றும் மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது கஜா புயலால் இதுவரை 4 மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.இதனால் மக்கள் தங்கள் வீடுகள்,வளர்ப்பு பிராணிகளான ஆடுகள்,மாடுகள்,மற்றும் விவசாயம் என அனைத்தையுமே இழந்து நடு வீதி நிற்க வைத்துவிட்டு சென்றுள்ளது.இந்த புயல் ஒருநாளில் வீசிவிட்டு சென்ற இந்த புயலால் 4 மாவட்டங்கள் பல நாட்கள் ஏன் பல வருடங்கள் ஆகும் முழுமையாக முன்னேறி வர. இந்நிலையில் கடந்த இரு தினங்க்ளுக்கு முன்பு முதல்வர் பிரதமரை சந்தித்து புயல் […]