இன்று முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலக புகழ்பெற்ற தாவூத் காம் தர்கா அமைந்துள்ளது. அங்கு இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அந்த விடுமுறை நாளை சரிசெய்யும் பொருட்டாக […]
முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உலக புகழ்பெற்ற தாவூத் காம் தர்கா அமைந்துள்ளது. அங்கு இஸ்லாமிய சூபியான ஒலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 15ஆம் தேதி அதாவது நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு […]
திருவாரூர்:கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என்று அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,தற்போது கொரோனா பரவல் முன்பை விட ஓரளவுக்கு குறைந்துள்ளது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வேளையில்,தமிழகத்தில் இனி கொரோனா […]
விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்ற இளைஞருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தான் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது, இவர்கள் கார் முன்பு சென்று கொண்டிருந்தஇருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு வந்ததால் விபத்த […]
திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் எனும் பகுதியில் குறுவை சாகுபடிக்கு தயாராகி வந்த சிவகுமார் என்பவரின் விவசாய நிலத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து கச்சாஎண்ணெய் அதிக அளவில் வெளியேறி நிலத்தில் பரவியுள்ளது. இந்நிலையில், இந்த ஓஎன்ஜிசி குழாய் நேற்று இரவே உடைந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் தாமதமாகதான் வந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள […]
திருவாரூர் மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கூடூரில் இயங்கி வரும் ஏ.டி.எம் மிஷினில் இரவு ஒரு மணி அளவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஏ.டி.எம்மை உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளது. இதனையடுத்து அருகில் வசித்தவர்கள் சத்தம் கேட்டதால் எழுந்து வந்து அவர்களை பிடிக்க முயன்ற […]
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நாய் உயிரிழந்ததாக உரிமையாளர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணவூர் பகுதியை சேர்ந்த சுமதி என்பவர் தான் 9 வருடங்களாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்டு எனும் நாய் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் கடம்பத்தூரில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உள்ளார். அப்பொழுது அவர் அந்த நாய்க்கு கொடுத்த மருந்து காரணமாக அது கோமா நிலையை அடைந்து விட்டதாகவும், […]
மாடு முட்டி உயிர் பிழைத்து கீழே விழுந்தவர் மீது லாரி ஏறியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த புதுத்தெருவை சேர்ந்த ரவி என்பவர் நேற்றிரவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். இந்நிலையில், சாலையில் படுத்துக்கிடந்த மாடுகள் வாகன ஒலிகளை பார்த்து மிரண்டுள்ளது. அச்சமயம் அவ்வழியே வந்த ரவியை அங்கிருந்த மாடு ஒன்றெனு முட்டியுள்ளது. இதனால் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார். அப்பொழுது சாலையில் வந்துகொண்டிருந்த டாரஸ் லாரி ரவி மீது ஏறி […]
திருவாரூரில் போதையால் மனைவியை கொலை செய்த கணவர், பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள தென்பரை எனும் கிராமத்தை சேர்ந்த 60 வயதான பால்சாமி என்பவர் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் மது அருந்திவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வருவது வழக்கம் என அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மாரியம்மாள் வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மதுபோதையில் அவரது மனைவி மாரியம்மாளிடம் சென்ற பால்சாமி […]
திருவாரூரில் ONGC குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், விவசாய நிலங்களில் பரவி பயிர்கள் நாசமடைந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் பல இடங்களில் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கச்சா எண்ணெய் எடுக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு நிலத்தடியில் பதிக்கக்கூடிய கச்சா எண்ணெய் குழாய்கள் சில எதிர்பாராத சம்பவங்களால் பாதிக்கப்பட்டு அந்த குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது அதன் மூலம் கச்சா எண்ணெய் வெளியேறி அந்த […]
781 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். கொரோனா மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன என்றும், அரசின் அறிவுரைக்கு ஏற்ப அதிகாரிகள் […]
நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் மே-31 வரை அரசு ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ள நிலையில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலாத நிலையில் தான் உள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட […]
கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81 பேர் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில், இதுவரை 32 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. அதில் 30 பேர் குணமாகி ஏற்கனவே வீடு திரும்பியுள்ள நிலையில், […]
திருவாரூர் அருகே வீட்டின் பின்புறம் உள்ள வயலில் மௌனிகா எனும் 17 வயது மாணவி காயங்களுடன் சடலமாக மீட்பு. திருவாரூரிலுள்ள மாவட்டமாகிய மகிழஞ்சேரியில் வசித்து வரும் செந்தில் குமாரின் 17 வயது பள்ளி பயிலும் மகள் தான் மௌனிகா. கிராம மக்கள் காலையில் வயலுக்கு சென்ற பொழுது மௌனிகா வயலில் சடலமாக கிடந்துள்ளார். அப்பொழுது ஆராய்ந்ததில் உடலில் காயங்களுடன் அவர் இறந்து கிடந்ததை அறிந்த மக்கள் வீட்டினருக்கு தகவல் அளித்துள்ளனர். இது அறிந்து அங்கு வந்த மௌனிகாவின் […]
இதுவரை நிவாரணம் பெறாதவர்கள் அந்தந்த ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்கள் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த பொருட்கள் பலருக்கு […]
முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வரலாம் என கூறப்பட்டிருந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் வெளியில் வந்து, தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் […]
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,755 பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நாளை முழுமுடக்கம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால், நாளை மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சில நகர்ப்புறங்களில் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையெடுத்து, சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் […]
மாணவருக்கு அறுவை சிகிக்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், உட்பட 20-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிக்சை செய்யப்பட்ட மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அறுவை சிகிக்சை செய்யப்பட்ட மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அந்த மாணவனை பரிசோதனை செய்த போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அறுவை சிகிக்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், உட்பட 20-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளதால், பல்வேறு கடைகள், கல்விக்கூடங்கள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் ஏற்கனவே மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. தற்போது இப்பல்கலைகழகத்தின் மூலம் நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பதிவாளர் புவனேஸ்வரி அவர்கள் அறிவித்துள்ளார். தேதியும் பல்கலைக்கழகம் என்று திறக்கப்படும் […]