“TTV தினகரன் ஏமாற்ற முடியாது” அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு..!!

Default Image

ஆர்.கே.நகர் போல எப்பொழுதும் டி.டி.வி.தினகரன் ஏமாற்ற முடியாது என்று அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் கூறினார்.

தேனி :

தேனி மாவட்டதில்  பேரறிஞர் அண்ணா அவர்களின் 110வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ  சிறப்புரையாற்றினர்.இக்கூட்டத்திற்கு சின்னமனூர் நகர் கழக செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் கண்ணன், இளநீர் ராமர், செல்வம், தீபஜோதி செல்வி மதிவாணன், அகிலன் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன் வரவேற்றார்.

அந்த கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ எஸ்.டி.கே.ஜக்கையன்  TTV தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார்.அப்போது அவர்,

தற்போது தமிழகத்தில் ரஜினி, கமல்  என ஏராளமானோர் கட்சி ஆரம்பிக்கலாம் ஆனால் இவர்களால் வருகின்ற  இடைத்தேர்தலை தைரியமாக சந்திக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து பேசிய அவர் , தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளான காவேரி, கண்ணகி கோவில், முல்லைபெரியாறு, கச்சத்தீவு, மீனவர், இலங்கை தமிழர்கள் என அனைத்து பிரச்சினைகளிலும் தமிழக மக்களை காப்பாற்றும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டரீதியாக பல போராட்டங்களை நடத்தி தமிழர்களின் ஜீவாதார உரிமையை பெற்று தந்திருக்கிறார். தமிழகத்தில் ஏராளமான அற்புதமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். இது போன்ற திட்டங்களை இனி யாராலும் முறியடிக்க முடியாது. அதன் பயனாக இன்று தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறது என்றார்.

Image result for எம்.எல்.ஏ எஸ்.டி.கே.ஜக்கையன்அடுத்து அவர் பேசுகையில் அம்மா அவர்களின் மறைவுக்கு பின்னால் நமது இயக்கத்தையும் , ஆட்சியை சிதைத்து விடலாம், சின்னத்தை முடக்கி விடலாம் என டிடிவி தினகரன் உட்பட பலரும் திட்டமிட்டார்கள். பொய் வழக்கு போட்டனர். முடிந்ததா? தற்போது 19 மாதங்களை கடந்து நமது கழக ஆட்சியை தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக் கின்றனர். இடையில் ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் சிறிது ஏமாந்திருக்கலாம்.ஆனால் இனி வருகின்ற தேர்தலில் TTV தினகரானால் ஏமாற்ற முடியாது என்று TTV தினகரனை விமர்சனம் செய்து பேசினார் எம்.எல்.ஏ எஸ்.டி.கே.ஜக்கையன.

DINASUVADU 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்