தேனி மாவட்டம் கேரளாவை ஒட்டியுள்ள குரங்கனி மலைப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாகவே தீ பற்றி எரிந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த குரங்கணி மலைக்கு டிரெக்கிங் செல்ல மாணவிகளை அழைத்துச்சென்றது சரியா? “அவர்கள் எங்களுடைய அனுமதி பெறவில்லை” என்று வனத்துறையினர் சொல்கின்றனர். “இவ்வாறு அனுமதி இன்றியே எப்போதும் அவர்களது விருப்பத்துக்கேற்ப அவர்கள் டிரெக்கிங் செல்கின்றனர்” என்றும் சொல்கிறார்கள். இது குறித்தும் நீதி விசாரணை தேவை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்,அரசியல் தலைவர்களும் தமிழக அரசிற்கு […]
தேனி மாவட்டம் கூடலூரில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில், மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் 101–வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மருத்துவஅணி செயலாளர் டாக்டர் கதிர்காமு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டார்ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கைபரப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வன், கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– ஜெயலலிதா இறந்த பின்பு, […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் வங்கிக் கிளையை முற்றுகையிட்டவர்களை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று, ஆண்டிபட்டி இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 134 கனஅடியிலிருந்து 215 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாகவும்,இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 31.45 டிஎம்சியாகும்.அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவானது சுமார் 7,000 கனஅடியாக உள்ளது.அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தேனி மாவட்டம் தேவாரம் வனப்பகுதியில் ஒரு கால் ஊனமான ஒற்றை மக்னா யானை, கடந்த சில நாட்களாக சுற்றித் திரிகிறது. இந்த யானையிடம் சிக்கி கடந்த சில மாதங்களில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகளை பீதியடையச் செய்யும் இந்த மக்னா யானை தேவாரம் பகுதியில் முகாமிட்டு அங்குள்ள பயிர்களை சேதப்படுத்திவருகிறது. தேவாரம் அருகே வனப்பகுதியில் ஒற்றை மக்னா யானை நடமாடி வருவதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். யானையின் நடமாட்டத்தால் விவசாயிகள் தோட்டத்திற்கு செல்வதை […]
தேனி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு . ரவிச்சந்திரன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவு. source: dinauvadu.com
தேனி: முதல்போக பாசன வசதிக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து 1060 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் என இன்முகத்துடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாய பெருங்குடி மக்கள்.
தேனி; மாவட்டம், குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் நவீன் மற்றும் அவரின் உறவினர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சனிப் பெயர்ச்சி நாளான இன்று, தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன… sources; dinasuvadu.com
தேனி என்.ஆர்.டி. சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 1–12–2015 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். களப்பிரிவு ஊழியர்களுக்கு கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். பகுதிநேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, பிளவக்கல் அணை உள்ளிட்ட பகுதிகளில் மழை
தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்
இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார் முடக்கியதே இவர்தானே. இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள். ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா மற்றும் TTV தினகரன் அணியை சேர்ந்த சில நிர்வாகிகள் உசிலம்பட்டியில் குரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.