மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 56 புள்ளி 5 அடியாக உயர்ந்துள்ளது. நெல்லையில் கனமழை-அணைகளின் நீர்மட்டம் உயர்வு: நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக பாபநாசம், […]
தேனி மாவட்டத்தில் உள்ள மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பிரபல ரவுடியாக அறியப்படும் இவர் மீது, தமிழகம் முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலமுறை சிறையும் சென்றுள்ளார். சமீபத்தில், மதுரை சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளாவுக்கு ஆடியோ மூலம் நாகராஜ் மிரட்டல் விடுத்திருந்தார். பின்னர் தேனி காவல்நிலைய ஆய்வாளருக்கும் மிரட்டல் விடுத்தார். இதை தொடர்ந்து, இவரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முடிந்தால் தன்னை பிடியுங்கள் என போலீசாருக்கு நாகராஜும் சவால் விடுத்திருந்தார்.. தலைமறைவாக இருந்த […]
சிறுமி மர்ம சாவில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தேனி அல்லிநகரத்தில் 3-வது நாளாகதொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அல்லிநகரத்தில் சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று 3வது நாளாக தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். அல்லிநகரத்தை சேர்ந்தவர் டிரைவர் ராஜா.இவரின் மகள் ராகவி 7ஆம் வகுப்பு படித்த்து வந்தார். செப்.25 மாலை இவரின் மகள் ராகவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக […]
தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் குமுளியில் சுற்று வட்டாரங்களில் பெய்த கன மழையினால் குமுளி மலைச்சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆகஸ்டில் பெய்த மழையினால் லோயர்கேம்பில் மலைச்சாலையில் சுமார் மூன்று இடங்களில் மண் சரிந்து சுமார் 15 நாட்களுக்கு மேலாக போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. இந்நிலையில்மலைச்சாலையில் மண் சரிந்த இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி போக்குவரத்து துவக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அப்பகுதியில் மீண்டும் கனமழை […]
ஆர்.கே.நகர் போல எப்பொழுதும் டி.டி.வி.தினகரன் ஏமாற்ற முடியாது என்று அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் கூறினார். தேனி : தேனி மாவட்டதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 110வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினர்.இக்கூட்டத்திற்கு சின்னமனூர் நகர் கழக செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் கண்ணன், இளநீர் ராமர், செல்வம், தீபஜோதி செல்வி மதிவாணன், அகிலன் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை […]
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற விநாயகர்சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல பல்வேறு அமைப்பினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி அமைப்பினரிடையே ஊர்வலம் செல்வது தொடர்பாக திடீர் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.மோதல் காரணமாக […]
போடி அருகே சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைந்து உள்ளது… தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துபட்டி, இராசிங்காபுரம், சங்கராபுரம், அம்மாபட்டி போன்ற கிராமங்களில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் எப்பவும் டாப் தான்.ஆனால் தற்போது விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். அந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடரும் வறட்சி கூடுதல் செலவு இவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் […]
விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா குரங்கணி தீ விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார். தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற 36 பே சிக்கி கொண்டனர்.இதில் பலர் பலியாகினர். இது குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா நியமிக்கபட்டார்.இவர் விசாரணையை தேனியில் பல்வேறு இடங்களில் நடத்தினர்.அந்த விசாரணை தொடர்பான அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் […]
தேனி அருகே கார் மரத்தில் மோதி விபத்துகுள்ளானதில் ஓட்டுனர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தஞ்சையிலிருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற கார் மரத்தில் மோதி விபத்துகுள்ளானது. தேனி மாவட்டம் காட்ரோடு காமக்காபட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சரவணன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 4 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்று முதல் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியில் முதல்போக பாசனப் பரப்பு நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தண்ணீரைத் திறந்து வைத்தார். தேனி மாவட்ட வருவாய் அலுவலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாளொன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வருசநாடு அருகே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சின்ன சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் விழுவதால், சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்குள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 22 அடி உயர்ந்துள்ளது. கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக மக்கள் வசிக்கும் பகுதகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வால்பாறையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை […]
திருமண நிகழ்ச்சிகள் இப்போது மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான முறைகளில் நடக்கின்றன. அழைப்பிதழில் இருந்து- மணமக்கள் உடுத்தும் ஆடை, மேடை அலங்காரம், ஊர்வலம், உணவு எல்லாமுமே காலத்துக்கு தக்கபடியான மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், திருமண முறையே மாறி புதுமைபடைத்துக்கொண்டிருக்கிறது. மணமக்களின் குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்ததுபோல் திருமண முறைகளை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியோடு மணவிழாவை நடத்தி இல்லறத்தில் இணைகிறார்கள். அந்த வகையில் மக்களை கருத்துடனும், களிப்புடனும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, திருக்குறள் வழி திருமணங்கள். தேனி அருகே […]
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி காட்டுத்தீ சம்பவம் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தேனி மாவட்டம் போடியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து போடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர், மீட்பு படையினரிடம் அதுல்ய மிஸ்ரா விசாரணை செய்து வருகிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள முத்து தேவன்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பறக்கும் படையினரை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பறக்கும் படையினர் இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். தீக்காயங்களுடன் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு 5 லட்சமும் நிவாரணம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி,மாநில செயற்குழு […]
தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மாணவ ,மாணவிகளை காப்பாற்றிய குரங்கணியைச் சேர்ந்த மரக்காமலை, காமராஜ், பாக்கியராஜ், சங்கர் ஆகியோருக்கும் அந்த கிராமத்து மக்களுக்கும் வீரச்செயலுக்கான விருதுகளை வழங்க என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) சார்பில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மாநிலச்செயலாளர் P.சண்முகம் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.