தேனி மருத்துவ கல்ல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும், தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த மாணவன் மனஅழுத்தம் காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு சென்றதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகம், உதித் சூர்யாவின் விவரங்களை மருத்துவ தலைமை கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்தது. உதித் சூர்யா மீது […]
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் புதிதாய் ஒரு உணவகம் திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, புரோட்டா ஒன்றுக்கு ரூபாய் ஒன்றும், பிரியாணி ஒரு பிளேட்டுக்கு ரூபாய் பத்துக்கும் விற்பனை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இந்த தகவல் பரவி, அணைத்து மக்களும் அந்த கடைக்கு விரைந்தனர். கூட்டம் அலைமோதியதால், அங்கு போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அதனை ஒழுங்குபடுத்தினர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை ஆவார் .இவரது மகன் சதீஷ் .இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் ஆண்டிபட்டி அதிமுக மாணவரணி ஒன்றிய துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை மர்மமான முறையில் சதீஷ் எரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதன் காரணாமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்த்துறையினர் சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் நடந்தது […]
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் மதன்.அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் முல்லைவேந்தன், அஜய், ராகுல். இந்த இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் படிக்கும் மாணவன் மதன்,12-ம் படிக்கும் மாணவர்களான முல்லைவேந்தன், அஜய், ராகுல் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு பெரிதாகவே ஆத்திரம் அடைந்த 10-ம் […]
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தமிழ் நாட்டில் பெரும்பாலும் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் மீண்டும் முன்னிலையில் உள்ளார். முன்னதாக அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது DINASUVADU
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தமிழ் நாட்டில் பெரும்பாலும் திமுக கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சிதம்பரம் மக்களவை தொகுதியில் தொல் திருமாவளவன் 445 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட பின்தங்கி உள்ளார். தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் முன்னிலையில் உள்ளார். அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சிபி.ராதாகிருஷ்ணன் கோவை மக்களவை தொகுதியில் முன்னிலையில் உள்ளார். DINASUVADU
தேனி, தர்மபுரி, திருவள்ளூர், கடலூர் போன்ற மக்காவை தொகுதியில் மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் சில தவறுகளின் காரணமாக மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இதன்படி தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டும் நடைபெறும் மறுவாக்கு பதிவிற்காக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அமமுக கட்சியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், கூறுகையில் ‘வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க […]
தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. நேற்று கோயம்புத்தூரில் இருந்து, பயன்படுத்தப்படாத வாக்கு பெட்டிகள் தேனிக்கு மாற்றப்பட்டன. இந்த மாற்றம் வழக்கமான ஒன்றுதான். ஒரு வேளை மறு வாக்குப்பதிவு நடைபெற்றால் தேவைபடும் என்பதால், இந்த மற்றம் என தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதனால், எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நேர்மையாக தேர்தல் நடத்த தேர்தல் அதிகாரிகள் தடுமாறுகின்றனர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் […]
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும் தங்களது வாக்குகளை மிகவும் உற்சாகமாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தேனீ மாவட்டம், போடி அருகே உள்ள மலை கிராமத்தில், அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி கேட்டு, அக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அந்த பகுதியில் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் அங்குள்ள வாக்குச்சாவடியில் ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு தேனி அருகே சுருளிமலையில், திவாகரன் என்பவர் காதல் ஜோடி இருவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்நிலையில், தேனீ நீதிமன்றம் முதன்முறையாக திவாகரனுக்கு தூக்குத்தண்டனை விதித்தது. இதனையடுத்து, வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்துள்ளது. மேலும், நீதிமன்றம் திவாகரனின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடுப்பத்திற்க்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5லட்சம் வழங்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விட்டுள்ளது. தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் 2014 -ம் ஆண்டு 10 வயது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது . மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜ் ,ரூபின் மற்றும் முருகேசன் என மூன்று பேரை […]
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி,சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை, இங்கு அருவியாக பெருக்கெடுக்கிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் தண்ணீர் அளவு கணிசமாக குறைந்து விட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.
இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களில் தேனி மாவட்டம் பெரிய குளம் காவல் நிலையம் 8 வது இடத்தை பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றது. […]
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள சண்முகாநதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில் பாசனத்திற்காக சண்முகாநதியில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் ஆகியோர், சண்முகாநதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொருத்து கூடுதல் நீர் திறந்துவிடப்படும் என்று கூறினார்.
தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை 8 மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் என்னதான் நவீனமடைந்தாலும் இயற்கையை நேசிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டேதான் செல்கிறது. நவீன யுகத்தின் மன அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, மனிதன் இயற்கையின் கைகளில் தஞ்சமடைகிறான். அதில் ஒன்றுதான் டிரெக்கிங் என்கிற மலையேற்றப் பயிற்சி. இந்த டிரெக்கிங் செல்வதற்கு கிராமப்புற இளைஞர்களைவிட நகர்ப்புற இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் இருந்தால் யார் வேண்டுமானாலும் […]
கஜா புயல் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கரை கடந்த கஜா அதிதீவிர புயலாக மாறி பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மரங்க சேதம் அடைந்துள்ளது.மேலும் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் புயல் கரையை கடந்த நிலையில் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.மேலும் 7 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்துவருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 10 […]
தேனியில் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், தேனியில் உணவு பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.மேலும் தேனி மாவட்டத்தில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க முன்வரும் தனியார் நிறுவனத்திற்கு 50% மானியம் வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனீ மாவட்டம் மஞ்சளாறு அணை 57 அடி உயரம் உள்ளது. இதில் 54 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இதனையடுத்து அந்த அணையிலிருந்து பணத்திற்காக நீர் திறக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்த மாவட்ட ஆட்சியர் வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் 62 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் என்றும், 152 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
தேனியில் கண்டமனூரில் உள்ள ஒரு ஜவுளி கடை தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் தீபாவளி பண்டிகைக்கென வைத்திருந்த அனைத்து துணிகளும் எரிந்து நாசமாகின. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்காக கடுமையா போராடிக்கொண்டிருக்கின்றனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்துள்ளது. தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தேனிமாவட்டத்தில் கொட்டி தீர்த்துள்ளது மழை.மேலும் தேனி அதன் சுற்றுவட்டார பகிதிகளான ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. DINASUVADU