ஆட்டம் காட்டிய அரிசி கொம்பன்.! மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்த வனத்துறை.!

Arisi Komban Elephant

தேனி, கம்பம் பகுதியில் சுற்றி திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது. 

கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் பிடித்து தமிழக எல்லையில் கடந்த மாதம் விட்டனர். அதன் பிறகு தமிழக எல்லையை கடந்து, தேனி , கம்பம் பகுதிக்குள் அரிசி கொம்பன் நுழைந்துவிட்டான்.

அதன் பிறகு சாலையோர வாகனங்களை சேதப்படுத்துவது, விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, அருகில் உள்ள ஆற்றில் தண்ணீர் குடிப்பது என அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை அரிசி கொம்பன் யானை வெகுவாக பாதித்தது.

இதனை அடுத்து யானையை பிடிக்க வனத்துறையினர் கடந்த சில வாரங்களாக முயன்று வந்தனர். கோடை மழை பெய்து வந்ததால் யானையை பிடிக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி தற்போது பிடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்