சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 13.09.2024) வெள்ளிக் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக தேனி மாவட்டத்தில் கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்தபகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..! தேனி வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி, […]
ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேனி மாவட்டம், குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சம்பவ இடத்தில் 7 பேர்உயிரிழந்தனர். மேலும், சிறுமி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 3 பெரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேனி-போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக இன்ஜின் சோதனை ஓட்டம் தேனி-போடி இடையே புதிய அகல ரயில் பாதையில் அதிவேக இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்ஜின் சோதனையை வேடிக்கை பார்த்ததோடு செல்போனில் படம் பிடித்த பொதுமக்கள், ரயில் இன்ஜினுக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் வரவேற்றனர்.
கழிவறை தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு. பேரூராட்சி கழிவறை (செப்டிக் டேங்) தொட்டியில் விழுந்து இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சியின் கழிவறை தொட்டியில் தவறி விழுந்து சிறுமிகள் சிறுவர் உயிரிழந்தனர். பண்ணைப்புரத்தில் 1-ம் வகுப்பு படித்து வந்த சுபஸ்ரீ (6), […]
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 19 […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைப்போல,நாளையும் நீலகிரி,கோயம்புத்தூர், தேனி,திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.. மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]
மாணவர்கள் சாதி அடையாளத்தை குறிப்பிடும் வகையில் வண்ணக் கயிறுகளை கைகளில் கட்டக் கூடாது தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை. தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும் அதன் மூலம் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் மற்றும் விளையாடும் […]
தேனி மாவட்டத்தில் நவீன அரிசி ஆலை தொடங்கப்படும் என பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின் முதல்வர் உரை. இன்று தேனி மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதில், ரூ.114.21 கோடியில் புதிய திட்ட பணிகளை தொடக்கி வைத்தார். ஊஞ்சம்பட்டியில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினர். இதுபோன்று ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடந்து முடிந்த திட்ட பணிகளை […]
தேனியில் மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நாளை நடைபெறும் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் […]
பிரதமரின் விவசாயிகளுக்கான ஆதரவு நிதி திட்டத்தின் கீழ் பணம் பெற்று வரும் விவசாயிகள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வருகின்ற 15-ஆம் தேதிக்குள் http://pmkisan.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து,தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் […]
தேனி:பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சியில் 1,10,11 வார்டுகளில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக விறுவிறுப்பாக நடந்து வந்த வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில்,வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை இன்று நடைபெற்று வருகிறது.அதன்படி,முறைப்படி விவரம் இல்லாத மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட உள்ளன.இதனையடுத்து,மனுக்களை திரும்பப்பெற பிப்.7ம் […]
தேனி:ஆண்டிபட்டி பேரூராட்சியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் நீதிபதி கையில் வாழைப்பூவுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள்,8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் […]
பெரியகுளம் தாலுகாவில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம். தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 3 கிராமங்களில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலியாக தனியாருக்கு பட்டா மாறுதல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. உதவி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் […]