சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.
இன்று அதிகாலை 4 மணி யளவில் பெரிய கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத் பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத் தில் புறப்பட்டு தேர் மண்டபமான மேலவீதிக்கு வந்தது.
அங்கு தியாகராஜர் – கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத் தொடர்ந்து காலை 5.40 மணிக்கு தேர்வடம் பிடித் தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலையில் அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.அவர்களை தொடர்ந்து பொதுமக்களும், பக்தர்களும் சிவ.. சிவ… ஓம். நமச்சிவாய என்ற பக்தி கோஷங்கள் முழுங்க வடத்தை பிடித்து இழுத்தனர்.
தேர் தஞ்சையில் உள்ள மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜ வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேர் முன்பு மேளதாளங்கள் மற்றும் தப்பாட்டம், கோலாட்டம் குழுவினர் இசை முழுங்க பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து சென்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…