தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் ஆய்வை கைவிட்டு ஆளுநர் திரும்பி போக வலியுறுத்தி திமுகவினர் 300 பேர் கருப்பு சட்டை அணிந்து கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது… source: dinasuvadu.com
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலில் வராகி அம்மன், பெருவுடையார், பிரகன் நாயகி அம்மன் சன்னதிகளில் ஆளுநர் தரிசனம் செய்தார். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை பார்வையிடும் ஆளுநர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்து, எம்.ஜி.ஆரின் பன்முகப்பார்வை என்ற நூலை வெளியிடுகிறார். பிற்பகலில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் பன்வாரிலால் புரோகித், […]
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஞாயிறு அன்று மேடை ஒளி,ஒலி அமைத்து புத்தாண்டை கொண்டாடினர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கொடிய ஆயுதங்களோடு தலித் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், மோட்டார் சைக்கிள்களை உடைத்து வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். குடிதண்ணீர் பைப்புகளையும் ,மின் இணைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், […]
தஞ்சாவூர்; காந்திஜி சாலையில் மணிக்கூண்டு எதிரில் இபிகே தங்கமாளிகை திறப்பு விழா நடந்தது. இபிகே தங்கமாளிகை நிறுவனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். வர்த்தக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், இன்ஜினியர்கள், டாக்டர்கள், தஞ்சை காசுக்கடை வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த தங்கமாளிகை திறப்பு விழாவில் பங்கேற்றனர். இபிகே தங்கமாளிகை உரிமையாளர்கள் மனோஜ் பிரபாகர், சிலம்பரசன் அனைவருக்கும் நன்றி கூறினர். திறப்பு விழா சலுகையாக 916 ஹால்மார்க் தங்க நகைகளுக்கு 3 […]
தஞ்சை மாவட்டம் சாந்தபிள்ளைகட்டு பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை நாளை முதல்வர் எடப்பாடி.K.பழனிசாமி அவர்கள் திறந்து வைக்க எபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறி அந்த பாலத்தை திறக்க கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த பாலத்தை முதல்வர் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை நகராட்சி 23வது வார்டு, நித்திய கல்யாணி புரம்,பர்மாகாலனி குளக்கால் தெரு.இப்பகுதி கட்டுமான தொழிலாளர்கள்,மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதாலோ என்னவோ குளக்காள் தெருவை பராமரிப்பதில் கிட்டத்தட்ட நகராட்சி நிர்வாகம் மறந்துவிட்டது எனலாம். தற்போது மின்சார வாரியமும் இப்பகுதி மக்களின் உயிரை காப்பதில் இருந்து விலகி நிற்கிறதோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த உயர் மின்னழுத்த எச்.டி கம்பத்தில் இரவு நேரங்களில் தீப்பிடித்து எரிவதாலும் அப்பகுதி மக்கள் ஒருவித […]
தஞ்சை மாவட்டத்தில் தொடர் கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தனிப்படை அமைத்து எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த 15ம் தேதி வாகன சோதனையில்து சந்தேகத்தின்பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த அருண்சங்கர் (28), பிரசாந்த் (22) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் இவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர். அதேபோல் கடந்த 12ம் தேதி திருவையாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது […]
ஒவ்வொரு குழந்தைக்கும் பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமானது. இப்போதுள்ள கால கட்டத்தில் அந்த சான்றிதழ் இல்லாமல் எந்த முக்கிய ஆவணமும் கிடைப்பது கடினம். இது குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனைகளில் பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டு அது மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டவுடன் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்ப படிவம் ரூ.5க்கு வாங்கி அதை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் முதல் பிரதி பெறுவதற்கு ரூ.10 கட்டணம் செலுத்தினால் போதும். இதையடுத்து ஒவ்வொரு கூடுதல் பிரதி பெறுவதற்கும் தலா […]
கதிராமங்கலத்தில் 185வது நாளாக நேற்று பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதியில் பூமியில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் கடந்த ஜூன் 30ம் தேதி கசிவு ஏற்பட்டது. இதையடுத்து எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அதன் பின் ஜூலை 1ம் தேதி முதல் கதிராமங்கலத்தில் பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 12ம் தேதி முதல் ஐயனார் கோயிலில் காத்திருப்பு […]
சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானத்தை ஆக்கரமித்து எடப்பாடி தஞ்சை வருகையால் அந்த மைதானத்தில் ரோடு போடும் பணியையை தடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது வருகிறது.இப்போராட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார்.