தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் 58 ஏக்கரை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58 புள்ளி ஒன்று ஏழு ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது. நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். DINASUVADU
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் பிரான்ஸ் சுற்றுலா பயணியை எரித்துக் கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். DINASUVADU
ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருவனந்தபுரம்- வேளாங்கண்ணிக்கும்,செப்டம்பர் 5-ல் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் வேளாங்கண்ணி – திருவனந்தபுரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி, செப்டம்பர் 6-ம் தேதி இரவு 10.10 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தஞ்சையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
விநாடிக்கு 11,270 கனஅடி நீர் தஞ்சை கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.காவிரியில் 4,007 கனஅடி, வெண்ணாற்றில் 4,000 ,கொள்ளிடத்தில் 2,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.மேலும் கல்லணை கால்வாயில் 2,263 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கல்லணை கரைகளில் ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பின் தாழ்வான பகுதியில் மணல் மூட்டைகளை நிரப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தஞ்சை அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர் அருகே ஊரணிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியல் நடைபெறுகின்றது. மதுக்கடைக்கு எதிராக கல்லணை கால்வாய் பாலத்தில் அமர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கும்பகோணம்: கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி அனைத்து ஊழியர்களுக்கும் 2.57 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 6 மாத பேறுகால விடுப்பு வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களும் ஓய்வுபெறும்போது பணிக்கொடை தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற கோரி மே 22ம் தேதி […]
தஞ்சையில் பிரசித்தி பெற்ற முத்துப்பல்லக்கு வீதியுலா கோலாகலமாக நடைப்பெற்ற வருகிறது. மராட்டிய மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இவ்விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லாக்கு சௌராஷ்ட்ரா தெரு, வடக்கு வீதி, கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உலா வந்தது. பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் முருகன், விநாயகர், தெய்வானை உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்கள்களுக்கு அருள்பாளித்தனர்
சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 4 மணி யளவில் பெரிய கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத் பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத் தில் புறப்பட்டு தேர் […]
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலில் 300ஆவது ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று மாலை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையேற்றுத் துவக்கிவைத்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த […]
தஞ்சையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் படுத்து உறங்கும் போராட்டம் செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் படுத்துக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, இரண்டாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் உட்கார்ந்தப்படியே இருந்தார். ஆனால் தேசிய கீதத்துக்கு […]
ஆறாவது நாளாக தமிழகத்தில் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தீவிரம் அடையும் நிலையில் தற்போது போக்குவரத்து ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் போரரட்டம் செய்தனர்.தஞ்சாவூரில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். 1200 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். source: dinasuvadu.com
தஞ்சையிலிருந்து திருப்பதி புறப்பட்ட அரசுப் பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டிச் சென்றார். கோடியம்மன் கோயில் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் பேருந்தின் முகப்பு விளக்கை சேதப்படுத்திவிட்டுச் சென்றதாக, காவல்நிலையத்தில் ஓட்டுநர் வீரமணியும், நடத்துநர் செல்வகுமாரும் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பேருந்தின் நடத்துநரான செல்வகுமார், பேருந்தில் வந்த வினித் என்ற நபரின் உதவியுடன் முகப்பு விளக்கை கல்லால் […]
தஞ்சை சென்னம்பட்டியில் உள்ள போதை மறுவாழ்வு மைய காப்பக காவலாளி ஜோதிராமன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்களாக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் பாலாஜி, அஜித்குமார், கார்த்திக், அர்ஷத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முன்னேற மத்திய அரசின் உதவி அவசியம் என்று குறிப்பிட்டார். தமிழகத்திற்கு தேவையான உதவிகளைப் பெற, ஆளுநர் புரோஹித், மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை அளித்து வருவதாகவும், இதனால் தான் மக்களின் ஆளுநர் என்று ஆளுநரைப் புகழ்ந்து கூறியதாகவும் அமைச்சர் கே. பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்…. source: dinasuvadu.com