உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை வைத்து தற்போது சில அமைப்புகள் அரசியல் செய்து வருகின்றன. ஒரு சில விஷமிகள் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று போலீசார் பந்தோபஸ்து அளித்து வந்தனர். அதன் பிறகு இந்து கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் பிள்ளையார்பட்டியில் உள்ள சிலைக்கு ருத்ராட்ச மலை அணிவித்து பாலபிஷேகம் செய்து பூஜைகள் செய்தார். இது மிகவும் சர்ச்சையானது. பின்னர் அங்கு மீண்டும் போலீசார் […]
நத்தை என்றாலே அருவருப்பாக பார்க்கின்ற மக்கள் மத்தியில், அதையும் பணம் கொடுத்து போட்டி போட்டு வாங்குபவர்களும் இருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் என்ற பகுதியில், தற்போது மழை பெய்து வருவதால், மருத்துவ குணம் கொண்ட நத்தை சீசன் துவங்கியுள்ளது. இந்த நத்தைகள் பொதுவாக ஏரி, குளங்களில் நீர் வடியும் பகுதிகளில் நீரை சேமித்துக் கொண்டு பூமிக்கு அடியில், உயிர் வாழும். இந்நிலையில், மருத்துவகுணம் கொண்ட நத்தைகளின் சீசன் துவங்கி உள்ளதால், நத்தை பிடிக்கும் பணியில் அந்த பகுதியில் […]
இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்கு 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக இந்திய உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோயம்புத்தூரில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டு நேற்றிலிருந்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். சந்தேகத்தின் பெயரில் யாரேனும் தென்பட்டாலோ, அதேபோல் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தென்பட்டாலோ போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், தமிழக முக்கிய புண்ணிய ஸ்தலங்கள், என […]
பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் மாணவி அனுபிரேமா. இவர் தந்தைபெயர் கண்ணன். அனுபிரேமா, பல்வேறு கட்டுரை போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றவர். இவர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு முதலமைச்சர் கையால் பதக்கமும் பரிசும் வாங்கியுளளார். இவர் அண்மையில் பட்டுக்கோட்டையில், தமிழ் தாத்தா உ.வ.சா இலக்கிய மன்றம் சார்பாக ‘ பேரிடர் பாதிப்பு சமயங்களில் மக்களுக்கு அரசு எந்த மாதிரியான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி […]
தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள நாடியம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஆடல் , பாடல் நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு அதற்கு சேர்த்து வைத்து இருந்த பணத்தில் கிராமத்தில் உள்ள பெரிய குளத்தை தூர்வார முடிவு செய்து தூர்வாரி வருகின்றனர். 150 ஏக்கர் கொண்ட அந்தக் குளத்தை மூன்று வருடத்தில் தூர்வாரி விடுவதாக அந்த கிராம இளைஞர்கள் கூறுகின்றன. இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் , ஆடல் பாடல் நிகழ்ச்சி ரத்து செய்ததால் வருடத்திற்கு 3 லட்சம் […]
தமிழகத்தில் மொத்தமாக 32 மாவட்டங்கள் இருந்தது.சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டமாக மாற்றப்பட்டதால் 33 மாவட்டங்களாக இருந்தது.இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவைவிதி 110 கீழ் திருநெல்வேலியில் இருந்தது தென்காசியும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் தனி மாவட்டங்களாக இன்று அறிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் தற்போது 35 மாவட்டங்களாக மாறியுள்ளது.இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் இரண்டு ஐ. ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். காஞ்சிபுரம் , செங்கல்பட்டு போலவே கும்பகோணத்தை தலைமை இடமாக […]
தஞ்சாவூரை அடுத்து வல்லம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி மஞ்சுளா.மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு செல்லும் போது நேற்று முன்தினம் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் அந்த மாணவியை அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த தகவல் வல்லம் அனைத்து மகளீர் காவல் […]
தேர்வில் காப்பியடிக்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று மாணவர்களிடம் உதவி பேராசிரியர் ஒருவர் லஞ்சம் கேட்டதன் பெயரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் முத்தையன் என்கிற உதவி பேராசிரியர் தொலைதூர கல்வித் தேர்வுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைய தேர்வறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.இந்த தேர்வுகள் அனைத்தும் கடந்த மே மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்வில் காப்பி அடிக்க அனுமதிப்பதாக மாணவர்களிடம் தெரிவித்த […]
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது செல்லும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலகிருஷ்ணனை நியமிக்க ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இது குறித்து விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்த பிறகே பல்கலைக்கழக வேந்தர் இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார் என கூறியது இதனால் இந்த நியமனத்துக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து […]
கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவகவுடாவும், அவரது மகனான ரேவண்ணாவும் தஞ்சாவூர் சாரங்கபாணி ஆலயத்திற்கு தரிசனத்திற்க்காக வந்தனர். ரேவண்ணா தான் கர்நாடாக பொதுப்பணித்துறை அமைச்சர். ஆதலால் அவரிடம் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு தமிழகத்திற்கு காவேரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது முதலில் மறுத்த அவர் பின்னர், கர்நாடகாவில் மழை பெய்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என கூறினார். DINASUVADU
தஞ்சை அருகே 75 வயது முதியவரான கோவிந்தராஜ், பிரதமர் மோடியின் புகைப்படத்தை கழுத்தில் அணிந்தவாறு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கோவிந்தராஜ் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மூன்று வருட காலமாக தமிழக மக்களை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதிப்புகளில் ஒன்று மீத்தேன் எடுக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டம். இதற்காக தமிழகத்தில் பல இடங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல் வலுக்கின்றன. இத்திட்டத்தை மக்கள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?? இத்திட்டம் கொண்டுவரப்பட்டால் அதன் பாதிப்புகள் என்ன?? என்பதுதான் நாம் இக்கட்டுரையில் காண இருக்கிறோம். எதிர்ப்பதன் பின்னணி.. இத்திட்டம் கொண்டுவரப்பட்டால், விளைநிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் வளம் குன்றி மக்கள் வாழ்வதற்கான ஏதுவான சூழ்நிலை இல்லாமல் […]
ஹைட்ரொகார்பன் திட்டம் எனும் நிலத்தடியில் தேங்கி இருக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டதிற்கு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடும் எதிர்ப்பு வழுக்கின்றன. அத்திட்டத்தின் அரசியல் பின்னணி மற்றும் அதனை அறிமுகப்படுத்திய அரசு எது? என்பதை தான் நாம் இக்கற்றையில் விரிவாக காண இருக்கிறோம் ஹைட்ரொகார்பன் என்றால் என்ன? அதன் விரிவுரை என்ன? என தெரியாதவர்கள் “நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றிய விரிவுரை!!!” இதில் காணவும். ஹைட்ரொகார்பன் திட்டத்தின் துவக்கம் 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலிருந்த காலகட்டத்தில் […]
காவிரியின் வரலாறு மற்றும் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சனையை எளிமையான விதத்தில் முந்தைய பதிப்பில் படித்து அறிந்தோம். இப்பொழுது இந்த பதிப்பில் தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையே நிலவும் காவிரி பிரச்சனை குறித்த ஒரு விரிவான அலசலாக காணலாம். பிரச்சனை தொடங்கிய ஆண்டு முதல் தற்காலம் வரையிலான நிகழ்வுகளை சுருக்கமாக படித்து அறியலாம் வாருங்கள்.! பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலவிய காலகட்டத்திலேயே தொடங்கி தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்குமான காவிரி பிரச்சனை. 1892 […]
இந்தியாவின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றான காவிரி கர்நாடகா மாநிலத்தின் கோடகு மாவட்டத்தில் உள்ள தலகாவேரி எனும் இடத்தில் உற்பத்தியாகி ஹசான், மாண்டியா, மைசூர் போன்ற கர்நாடக மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது; தமிழ்நாட்டின் தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மற்றும் பிற தமிழக மாவட்டங்களில் பாய்ந்தோடுகிறது காவிரி ஆறு. 765 கிலோமீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆறு தமிழகம் மற்றும் கார்நாடக மாநிலங்களில் பாய்ந்தோடுவதோடு, காவிரியும் அதன் துணை […]
தஞ்சாவூர் மாவட்டம் பாமக நிர்வாகி ராமலிங்க படுகொலையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் பொது மக்களின் வாழ்க்கை பாதிக்கக்பட்டடுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம்.இவர் கடந்த 5_ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலை தொடர்பாக காவல்துறை இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ராமலிங்கபடுகொலையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதன் எதிரொலியாக திருபுவனம் , திருவிடைமருதூர் , திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் […]
தஞ்சையில் வீணை தயாரிக்கும் 22 பேருக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வீணைகள் தயாரிப்பு இருந்தாலும், தஞ்சையில் தயாரிக்கப்படுகிற வீணைகளுக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. இந்த வீணைகள் தனித்துவம், பாரம்பரியம், கலைநயம், வரலாற்று பூர்வீகம் ஆகிய சிறப்பு அம்சங்களை கொண்டதாகும். இதனால், தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வீணை தயாரிக்கும் 22 பேர் புவிசார் குறியீடு அங்கீகாரத்திற்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு புவிசார் குறியீட்டின் அங்கீகரிக்கப்பட்ட […]
கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் வைரமுத்து கூறுகையில், கஜா புயல், இயற்கை நம்மீது கொடுத்த போர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் .கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் அறிவர்.கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிட்டிருந்தால் அதிக நிவாரண நிதி கிடைத்திருக்கும்.மேகதாது பிரச்னையை சர்வதேச பிரச்னையாக […]
தஞ்சை பெரியகோயிலில் தியான பயிற்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கும்பகோனத்தை சேர்ந்த வெங்கட்டின் உயர்நீதிமன்றக்கிளையில் தஞ்சை பெரியகோயிலில் 2 நாள் நடைபெற உள்ள ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான பயிற்சிக்கு தடைகோரி முறையீடு செய்தார்.அதில் புராதன தன்மை வாய்ந்த பெரியகோயில் சேதப்படுத்துவதாக மனுதாரர் குற்றச்சாட்டினார். இந்நிலையில் இவரின் முறையீட்டை மதியம் விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.இதன் பின்னர் தஞ்சை பெரியகோயிலில் தியான பயிற்சிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு […]