தஞ்சாவூர்

பூச்சி மருந்து குடித்து தற்கொலை – மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர்!

தஞ்சையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.  அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி ஜனவரி 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்த நிலையில், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜனவரி 19ம் தேதி உயிரிழந்தாா். மதம் மாறுமாறு கூறி வற்புறுத்தியதால், அவா் மன உளைச்சலுக்கு […]

committed suicide 4 Min Read
Default Image

முன்னாள் முதல்வர்களின் சிலைகளை திறந்து வைக்கும் முதல்வர்..!

கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இன்று தஞ்சை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா சிலைகளை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து இன்றிரவு தஞ்சையில் தங்கும் முதல்வர் நாளை திருச்சியில் முடிவுற்ற நலத்திட்ட பணிகள், அடிக்கல் நாட்டும் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பீடு ரூ.1084.80 கோடி […]

CMStalin 2 Min Read
Default Image

பெற்ற தாயே இப்படி பண்ணலாமா?…கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்!

தஞ்சை:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை கொலை செய்த கொடூர சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் திருப்பம். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மக்கள்  மட்டுமல்லாது,அதனை சுற்றியுள்ள நாகை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த நிலையில்,தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறைக்குள் நேற்று முன்தினம் அதிகாலை,பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து,உடனடியாக […]

#Murder 4 Min Read
Default Image

அதிர்ச்சி…பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு கொடூர கொலை!

தஞ்சை:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மக்கள்  மட்டுமல்லாது,அதனை சுற்றியுள்ள நாகை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் சிகிச்சை சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில்,தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறைக்குள் இன்று அதிகாலை,பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து,உடனடியாக மருத்துவர்கள் […]

#Murder 3 Min Read
Default Image

#Breaking:சதய விழா:நாளை தஞ்சையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. சோழ அரசர்களின் பெரும் புகழுக்குச் சொந்தக்காரரும்,மிகச் சிறந்த அரசர்களில் ஒருவருமான ராஜராஜசோழன் அவர்கள்,தஞ்சை பெரிய கோவில் என்னும் பேரதிசயத்தை கட்டினார்.இதன்மூலம்,ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவரது சிறப்பு ஓங்கி நிற்கிறது.இதன்காரணமாக, உலக அளவில் புகழ் மிக்கவராக மாறியுள்ளார்.இவரின் பிறந்த நாள் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,ராஜராஜசோழனின் 1036 வது சதய விழாவை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் […]

Rajaraja Chola's 1036th Satya festival 2 Min Read
Default Image

ஆம்புலன்சில் கடத்தப்பட்ட 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் …!

ஆம்புலன்சில் வைத்து கடத்தப்பட்ட 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆம்புலன்சில் வைத்து கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கஞ்ச கடத்த முயன்றது விசாரணையில் ’69தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஒரு கோடி மதிப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி வந்த நாகையை சேர்ந்த டெரன்ஸ் ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ambulance 2 Min Read
Default Image

மருத்துவமனையிலிருந்து கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு …!

தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த 24 வயதுடைய குணசேகரன் எனும் கட்டிட தொழிலாளியின் மனைவி தான் ராஜலட்சுமி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ராஜலட்சுமி கர்ப்பிணியாக இருந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணி ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4 ஆம் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் என்னும் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 5 […]

Baby abducted 4 Min Read
Default Image

இளைஞரின் கண்ணைக்கட்டி காட்டில் வைத்து தாக்கிய கும்பல் கைது!

திருடி விட்டதாக கூறி இளைஞரின் கண்ணை கட்டி வைத்து காட்டில் பிரம்பால் அடித்து தாக்கிய கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்கா பூண்டி மேல தெருவில் வசித்து வரக்கூடிய குணசேகரன் என்பவனின் மகன் தான் ராகுல். கூலித்தொழில் செய்து வரக்கூடிய ராகுல் திருடி விட்டதாக கூறி அந்த ஊரில் இருக்ககூடிய சில  இளைஞர்கள் சேர்ந்து ராகுலின் கண்ணை கட்டி வைத்து அருகே உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று மரத்தில் பிடித்து வைத்துக்கொண்டு […]

#Arrest 4 Min Read
Default Image

இளைஞனின் கண்ணை கட்டி காட்டில் வைத்து சித்ரவதை – கொடூர மிருகங்களாக மாறிய மனிதர்கள்!

திருடியதாக கூறி ராகுல் எனும் இளைஞனின் கண்ணை கட்டிவிட்டு மனிதாபிமானமற்று பின்புறம் பிரம்பால் தாக்கிய கொடூரமான இளைஞர்களின் செயல் பலரையும் கண்கலங்க செய்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பூண்டிமேடு தெருவில் வசித்து வரும் ராகுல் எனும் இளைஞன் திருடியதாக கூறப்படுகிறது. ராகுல் கூலி தொழிலாளியாக வேலை செய்பவராம். இவர் திருடியதாக கூறி கும்பலாக சிலர் அவரை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவரது கண்ணை கட்டி வைத்து மரத்துடன் சேர்த்து இருவரை பிடிக்க வைத்துவிட்டு சரமாரியாக […]

blindfolded 3 Min Read
Default Image

செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன் சோகத்தில் ரசிகர்கள்!

தமிழ் முன்னணி தொடராகிய செம்பருத்தி தொடரிலிருந்து அதன் கதாநாயகன் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர் செம்பருத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நன்முறையில் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகனாக கார்த்தி கடந்த 800 தொடர்கள் வரை நடித்துள்ளார். எனவே மக்கள் மத்தியில் அவரே கதாநாயகனாக பதிவாகி விட்ட நிலையில் தற்பொழுது கதாநாயகன் கார்த்திக் […]

Karthik 4 Min Read
Default Image

பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு!

பத்திரிக்கையடித்து சீர்வரிசையுடன் தஞ்சையில் நாய்க்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயல்.  தஞ்சையில் உள்ள தென்றல் எனும் இடத்தில தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த கிருஷ்ணமூர்த்தியின் இரு மகள்களுக்கும் அண்மையில் திருமணம் முடிந்து விட்டது. இருவரில்  மற்றொருவர் சென்னையிலுமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூரில் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் டாபர்மேன் வகை நாய் ஒன்றை பிள்ளை போல செல்லமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், கர்ப்பிணியாக இருக்க கூடிய இந்த நாய்க்கு அபிராமி என […]

babyshower 3 Min Read
Default Image

வரலாற்று தலைவன்..மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழா! மின்னும் பெரியகோவில்

இன்று  மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதயவிழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது. தஞ்சையை சோழ சம்ராஜியத்தை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது ஆண்டு சதயவிழா இன்று தஞ்சையில் அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பெருமையை தஞ்சையில் கோவிலில் காட்டியவர்.இன்றும் உலகம் அதியத்தோடு பார்க்கும் அரசர்.வியப்பூட்டும் அவரின் கட்டக்கலை கம்பீரமாக ஆயிரமாண்டு கடந்து நிமிர்ந்து நிற்கிறது. பொற்கால ஆட்சியை நடத்திய மன்னர்.போர் களத்தில் வெற்றியை மட்டுமே பார்த்த வீரதீர மன்னன் என்றெல்லாம் பெருமைக்கு சொந்தக்காரர் மாமன்னர் ராஜராஜ சோழன் […]

Rajaraja Chola 3 Min Read
Default Image

வேலையில்லாததால் நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள்!

வேலையில்லாததால் நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள், அமோகமாக விற்பனை நடைபெறுவதாக மகிழ்ச்சி. அண்மை காலங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதால் கூலித் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து காணப்படுகின்றனர். அதிலும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணியில் காவிரி கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டாததால் விவசாயிகள் விவசாயப் பணிகளை நடத்த முடியாமல் உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளை தேடி சென்றுள்ளனர். அதில் ஒன்றாக ஆற்றங்கரை குளக்கரை, வயல்வெளிகள் உலாவக்கூடிய நத்தைகளை பிடித்து அவற்றை விற்று […]

mercenaries 4 Min Read
Default Image

ரேடார் மூலம் ராஜராஜ சோழன் சமாதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரேடார் மூலம் ராஜராஜ சோழன் சமாதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் அவர்களின் சமாதி கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் எனும் சிற்றூரில் உள்ளதாக கூறப்படுகிறது.  அவரது சமாதி உள்ளதாக கருதப்படக் கூடிய இடத்தில் லிங்கம் ஒன்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது, இது தான் சமாதி எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இடத்தை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

HIGH COURT 2 Min Read
Default Image

தஞ்சையில் மாணவர்களால் நடத்தப்பட்ட நீட் எதிர்ப்பு போராட்டம் – போலீசார் மாணவர்களிடையே கலவரம்!

தஞ்சையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் மற்றும் மாணவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் பல்வேறு அரசியல்வாதிகள் அமைச்சர்கள் நடிகர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்கு மத்தியில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் நீர் தேர்வு நடைபெற உள்ளது. நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் சில மாணவர்களும் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து மாணவ அமைப்பினர் பல இடங்களில் தற்பொழுது போராடி வருகின்றனர். இன்று காலை தஞ்சாவூரில் […]

#Police 3 Min Read
Default Image

கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை ஆட்சியரிடம் மனு அளித்த துப்பரவு பணியாளர்.!

இயந்திரத்தில் சிக்கி கை துண்டான தற்காலிக துப்புரவு பணியாளர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரேவதி. பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கின் மீது நுண் உரம் செயலாக்க மையத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மக்கும் உரங்களையும், மக்காத உரங்களையும் பிரித்தெடுத்து அதனை இயந்திரத்தில் மாற்றி வேலை செய்து […]

cleaner revathi 4 Min Read
Default Image

தஞ்சை ஆட்சியர் கொரோனா நோயாளிக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தஞ்சை இளைஞருக்கு பிறந்தநாள் கேக் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த தஞ்சாவூர் ஆட்சியர் கோவிந்தராஜ். கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நோயாளிகள் பலரும் மன அழுத்தத்திலும் மரண பயத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறா. இளைஞருக்கு இன்று […]

BIRTH DAY 3 Min Read
Default Image

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை அரசு மருத்துவமனை – குழந்தைகளுக்கு தீ விபத்து!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல். தஞ்சாவூர் மிராசுதார் எனும் அரசு மருத்துவமனையில் புதிதாக பிரசவ வார்டு புதிதாக மாடி கட்டடத்தில் கட்டப்பட்டு தற்பொழுது சில நாட்களாக தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் 200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிதாக பிறந்த பச்சிளங்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்த பிரசவ அறையின் பின்புறத்தில் மின்னழுத்தத்தின் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக பிரசவ அரைக்கும் […]

#Fireaccident 2 Min Read
Default Image

3 நிற அட்டைகள் வழங்கி, மக்கள் நடமாட்டத்தை குறைக்க கும்பகோண அரசு புது முயற்சி!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல இடங்களிலும் அரசு தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகிறது. இந்தியாவிலும் கடந்த 20 நாட்களாக இருந்த ஊரடங்கு மேலும் அதிகரிக்கப்பட்டு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளியில் வருபவர்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வரவேண்டாம் எனவும், சில அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் மட்டுமே வரவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நேரங்கள் அடிப்படையில் மக்கள் வெளியில் வரலாம் என அரசாங்கம் கூறி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், […]

coronavirus 4 Min Read
Default Image

அதிராம்பட்டினம் அருகே பைக் – வேன் மோதி இருவர் உயிரிழப்பு!

இன்று தொழிநுட்பம் வளர்ந்துள்ள நிலையில், மக்களும் இதற்க்கேற்றவாறு தங்களது தகவமைப்புகளை மாற்றி வருகின்றனர். இன்று 10 வயதிற்கு மேற்பட்ட, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட இருசக்கர வாகனத்தில் மிக வேகா செல்கின்றனர்.  இந்நிலையில், நாளுக்குநாள் விபத்துகளினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, தற்போது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பைக் – வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பைக்கில் சென்ற அதிராம்பட்டினத்தை சேர்ந்த முத்து வேனில் வந்த சண்முகசுந்தரம் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

#Accident 2 Min Read
Default Image