கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 17 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, தேனி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, […]
தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை. தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037ஆம் ஆண்டு சதய விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இன்று கவியரங்கம், கருத்தரங்கம், பரதநாட்டிய நிகழ்வு போன்றவை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நாளை தஞ்சையில் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சை ஆட்சியர் […]
ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை குறிப்பிடும் வகையில் தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் நாளையும் நடைபெறும் சதய விழா தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவில் என அளிக்கப்படும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டிய சோழ மன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டி நாளை சதய விழாவாக ஆண்டுதோறும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1037வது சதய விழா இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்று ராஜராஜ சோழன் பற்றிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அடுத்து நடன நிகழ்ச்சி, […]
வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவு. தஞ்சை சாஸ்த்ரா கல்வி நிறுவனம் நீர்நிலையில் அமைந்துள்ளதா? என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலையில் அமைந்துள்ளதால் மாற்று இடம் வழங்க அனுமதிக்கும் அரசாணை பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு […]
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில்,வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என ஓபிஎஸ் ஆதரவாளரும்,முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.மேலும்,முன்னதாக நடைபெற்ற பொதுக்குழுவுக்கு உறுப்பினர்கள் ஆல்லாத 600 பேர் வந்திருந்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தஞ்சையில் செய்தியாளர்களிடம் […]
தஞ்சை பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் அளித்த 7 பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பரிந்துரை. தஞ்சை பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வுக்காக 7 ஊழியர்கள் போலி சான்றிதழ் தந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வு எழுதி தேர்வானதாக போலிச்சான்று தந்து பதவி உயர்வு பெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியர்கள் 7 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ( DoTE ) பரிந்துரை செய்துள்ளது. பதவி உயர்வு பெற […]
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிழாவின்போது, சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்ததால் 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக […]
தஞ்சை:ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனையடுத்து,கேரளாவில் காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, ஐடியல் உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் என்பவர் […]
தருமபுரம் பட்டின பிரவேசம் நடைபெறும் என அறிவித்ததால் என்னை ஆளும் கட்சியினர் மிரட்டுகிறார்கள் என மதுரை ஆதீனம் பேட்டி. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதினம் குரு மகா சன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.இதற்கு பாஜக,பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனையடுத்து,தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் தானே சென்று தருமபுர […]
தஞ்சை தேர் விபத்து குறித்து இன்று விசாரணையை தொடங்குகிறார் வருவாய்த்துறை முதன்மை செயலாளர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்த ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும் அறிவித்தது. […]
தமிழகத்தில் இளம்பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.அந்த வகையில்,விருதுநகர்,வேலூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.பொதுவாக, அவர் பணி முடித்து விட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்த […]
தஞ்சையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சையில் தேர் சப்பரம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். விமானம் மூலம் தஞ்சை சென்ற முதலமைச்சர், இறந்தவர்களின் ஒவ்வொருவரின் வீடுகளுக்கு சென்று […]
தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம். இதுதொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் […]
தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தஞ்சாவூர் அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவில் பவனி வீதி உலாவின் போது இன்று அதிகாலை 3.10 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் தேரோட்டம் முடிந்து, தேரினை திருப்ப முற்பட்டபோது தேர் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதாக […]
தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல். தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால், அப்போது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு […]
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,நேற்று நள்ளிரவு நடைபெற்ற களிமேடு தேர் திருவிழாவில் தஞ்சை பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால் மின்சாரம் […]
நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கத்தி குத்து. நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் […]
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார். தஞ்சாவூர் மாவட்டம் மனொலிப்பெட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் 17 வயது சிறுமி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சமீபகாலமாக அவரது உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெற்றோர்கள் சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த […]
பெற்ற தாயை 10 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்த மகன்கள். தஞ்சாவூர் மாவட்டம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானஜோதி. இவருக்கு வயது 62. இவரது கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் மற்றும் ஒரு மகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இதனை அடுத்து இரண்டு மகன்கள் இருந்த நிலையில் இவரது மூத்த மகன் சண்முகசுந்தரம் காவல்துறை அதிகாரியாகவும், இளைய மகன் வெங்கடேசன் என்பவர் தொலைக்காட்சி […]
புதுக்கோட்டை,தஞ்சை மாவட்டங்களுக்கு ஏப்ரல் 11,13 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல,தஞ்சை மாவட்டத்திற்கு ஏப்ரல் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]