தஞ்சையில் அதிரடி வாகன சோதனை
தஞ்சை மாவட்டத்தில் தொடர் கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தனிப்படை அமைத்து எஸ்பி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த 15ம் தேதி வாகன சோதனையில்து சந்தேகத்தின்பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த அருண்சங்கர் (28), பிரசாந்த் (22) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் இவர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.
அதேபோல் கடந்த 12ம் தேதி திருவையாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருப்பனந்தாள் சோழபுரத்தை சேர்ந்த செந்தில்நாதன் (19), முகமதுசபீர் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 10ம் தேதி கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு கிடைந்த தகவலின்பேரில் பெரிய கடை தெருவுக்கு சென்று அங்கு நின்ற நாகை மாவட்டம் சவுகித் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த அசான் சாகுல்ஹமீதுவை (34) கைது செய்தனர். கடந்த 12ம் தேதி நாச்சியார் கோயில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் சிவநகரை சேர்ந்த முருகனை (31) கைது செய்தனர். இதன்படி இவர்களிடம் 45 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.