டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் […]
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு தொடரிலும் அசத்தலான வெற்றிபெற்று நாடு திரும்புகிறது. ஏற்கனவே, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றி அசத்தியது. டி20 தொடரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் […]
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட் போட்டி (பாக்சிங் டே டெஸ்ட்) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது, ஆஸ்திரேலியாவை விட 310 ரன்கள் பின்தங்கி விளையாடுவதில் தடுமாறி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய […]
பிரிஸ்பேன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் நிறைவுற்ற நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியானது டிராவை நோக்கி செல்கிறது. இந்த டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே பிரிஸ்பேன் மைதானத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ள வானிலை நிலவுகிறது என அந்நாட்டு […]
பெர்த் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி தான். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி, முதல் இன்னிங்ஸ்க்கு 150 […]
திருவையாற்றில் அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தனியார் கரும்பு ஆலை, விவசாயிகளின் பெயரில் சுமார் 300 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் , அதனை அடைத்து விவசாயிகளின் பெயரில் உள்ள கடனை அடைக்க வேண்டும் எனவும், இதில் தமிழக அரசு தலையிட்டு ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும் எனவும் கரும்பு விவசாயிகள் கடந்த 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். […]
புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மற்றும் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு. புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார். இதுபோன்று, மழை மற்றும் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் மீது ஜேசிபி இயந்திரம் களமிறக்கப்ட்டு விளைநிலங்கள் மூடப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புறவழிசாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, நிலங்களை அரசு கையகப்படுத்துவது வழக்கமான ஒன்று. அப்படி கையகப்படுத்துவதில் விலை நிலங்களும் அடங்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் விலை நிலங்களில் நடவு செய்யப்பட்டு இருந்தது. நடவு செய்து 60 நாட்களே ஆன நிலையில் தற்போது […]
கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட 17 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, தேனி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, […]