பரபரக்கும் தென்காசி மறுவாக்கு எண்ணிக்கை களம்.! மீண்டும் துவங்கி.. மீண்டும் நிறுத்தம்.!

Selvamohandas admk - Palani Nadar Congress

தென்காசி மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டனியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் வெற்றிபெற்றார். எதிர்த்து போட்டியிட்டு இருந்த அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனைவிட 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்று இருந்தார்.

வாக்கு எண்ணிக்கையின் போது, இயந்திர வாக்குகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்ததாகவும், அதன் பிறகு தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்ததால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபத்தி தென்காசி தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டு இருந்தார். அதன்படி , இன்று மாவட்ட துணை ஆட்சியர் லாவண்யா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அப்போது, ஆரம்பத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கப்பட்டது. பின்னர் 13 சி எனும் ஒரு வாக்குப்பெட்டி மட்டும் எண்ணப்படுவதாக அதிமுக பிரமுகர்கள் குற்றம் சாட்டிய நிலையில் மீண்டும் அனைத்து தபால் வாக்குகளும் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் பிரச்சனை ஏற்படவே தற்போது மீண்டும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack