தென்காசியில் பரபரப்பு.! வழக்கறிஞர் உட்பட 2 பேர் வெட்டி கொலை.! ராணுவ வீரர் தப்பியோட்டம்.!
தென்காசியில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுளள்னர். தப்பியோடிய ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் எனும் கிராமத்தில் வசித்து வந்த வழக்கறிஞர் அசோக் குமார் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவத்தில் ராணுவ வீரர் சுரேஷ் என்பவர் தான் ஈடுபட்டார் என கூறப்படும் நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவம் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட எஸ்.பி சாம்சன் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய ராணுவ வீரர் சுரேஷ் என்பவரை தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.