சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
செங்கோட்டை பெண் நகர்மன்ற தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அந்நகராட்சி ஆணையர் சுகந்தி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இந்த சூழலில், கடந்த டிசம்பர் மாதம் திமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக என 19 பேர் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பான மனு செங்கோட்டை நகராட்சி ஆணையரிடமும் வழங்கப்பட்டது. […]
6 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தப்படாத காரணத்தால் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகம் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டது. தென்காசியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் சொத்துவரி செலுத்தவில்லை என நீதிமன்றம் வரை சென்றும் அவர்கள் வரி செலுத்தவில்லை என கூறி தென்காசி நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி ரூபாய் 6.80 லட்சம் இருக்கிறது. இதற்காக நீதிமன்றம் உத்தரவு போட்டும் செலுத்தப்படாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகத்தை ஜப்தி செய்து அலுவலகத்தை பூட்டியுள்ளனர்.
ஒரு சிறு மாத்திரையில் வள்ளுவர் உருவத்தை வரைந்த ஏழை மாணவியின் அசாத்திய ஓவிய திறமையானது குடும்பச்சூழல் காரணமாக நின்றது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு விதமான திறமைகளும் விருப்பங்களும் இருந்தாலும் வயிற்று பிழைப்புக்காக கிடைத்த வேலைக்கு செல்லும் காலம் இது. இத்தகைய நிலையில் சிறு பொருள்களில் கூட ஓவியம் வரையும் திறமை கொண்ட இந்த பெண் தனக்கு விருப்பமான ஓவியக்கலை படிப்பில் குடும்ப சூழ்நிலையால் சேர முடியாமல் இருக்கிறாள். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆழங்குலம் அடுத்துள்ள ஊத்துமலை கிராமத்தை […]
தென்காசி மாவட்டம் செல்லப்பிள்ளையர்குள கிராமத்தில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தில் இருந்த கோடி தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கிராமத்தில் பாஜக கொடிக்கம்பத்தில் இருந்து கொடியை மர்மநபர்கள் எரித்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே செல்லப்பிள்ளையார்குளம் எனும் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சி கொடிக்கம்பங்கள் இருக்கின்றன. அதே போல, பாஜக கொடிக்கம்பமும் இருக்கிறது. இந்த கொடிக்கம்பத்தில் இருந்து யாரோ சில […]
தென்காசியில் 2019ஆம் ஆண்டு திருடப்பட்ட நகைகளை அணிந்து, வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்து பணிப்பெண் ஒருவர் போலீசில் வசமாக சிக்கிக்கொண்டார். தென்காசியில் சிவந்தி நகர் பகுதியில் பங்கஜவள்ளி எனும் ஓய்வுபெற்ற ஆசிரியை தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2019ஆண்டு ஓர் திருட்டு நடைபெற்றுள்ளது. அந்த திருட்டு சம்பவத்தில் 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. அப்போதே போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் தடையங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் கண்டறிய முடியவில்லை. வருடங்கள் கடந்த பிறகு […]
நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை- (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி,கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் […]
நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் […]
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் அறிவித்துள்ளார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்க்கது.
இன்று முதல் மூன்று நாட்கள் குற்றாலம் ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை . தொற்றுநோய் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டிய தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இன்று முதல் வருகின்ற இரண்டாம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது […]
குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். புத்தாண்டு விடுமுறைக்காக ஏராளமானோர் வருவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி. தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய பகுதிகளில் 8 மாதங்களுக்கு பின் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குற்றாலம் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி […]