சிவகங்கை மாவட்டத்தில் உள்ளதிருபுவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழர்களின் நாகரிகத்தை நாம் அறியலாம். இந்நிலையில், தமிழரின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் கீழடி அகழாய்வுகள் தொடர்பாக, #KEEZHADIதமிழ்CIVILIZATION என்ற ஹாஸ் டேக் தற்பொழுது ட்விட்டரில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
மானாமதுரரையில் சில மாதங்களுக்கு முன்னர் அமமுக பிரமுகர் சரவணன் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதற்க்கு பழிவாங்கும் நோக்கில் மானாமதுரையில் உள்ள வங்கியில் கொலைமுயற்சி நடைபெற்றுள்ளது. சரவணன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், தங்கமணி என்பவரை கொலை செய்வதற்காக, அவரை பின் தொடர்ந்து, மானாமதுரையில் உள்ள ஒரு வங்கிக்குள் சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கொலைகார நண்பரும், தங்கமணியை கொலை செய்ய தாக்கியுள்ளார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட வங்கி காவலாளி தான் வைத்திருந்த துப்பாக்கியால் தங்கமணியை தாக்கிய தமிழ்ச்செல்வனை சுட்டுவிட்டார். இதனால் காயமடைந்த […]
சில தினங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் இருளப்பசாமி என்பவர் ஜீவசமாதி அடைவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் செய்திருந்தனர். அவர் ஜீவசமாதி அடைய போவவதாக செய்தி சுற்று வட்டாரத்தில் பரவியத்தன் பேரில், வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். ஆனால், அன்றைய தினம் அவர் ஜீவசமாதி அடைவதில் இருந்து பின்வாங்கி விட்டார். இன்னும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருக்கிறது. அது நிறைவேற்றிவிட்டு வேறு நாளில் ஜீவசமாதி அடைய போவதாக தகவல்கள் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாசங்கரை எனும் கிராமத்தில் தனது குடும்பத்திரனருடன் வசித்து வருபவர் இருளப்பன், இவருக்கு வயது 80. இவர் நேற்று இரவு 12 மணியில் இருந்து இன்று காலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடைய உள்ளதாக தகவல் வெளியானது இதனால் அங்கு சுமார் 5000 பேர் அந்த ஜீவசமாதியை காண மக்கள் கூடினர். ஜீவசமாதி அடைவது பற்றி இருளப்பன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘ சிவபெருமான் தன் கனவில் வந்து கூறியதால் இந்த முடிவு எடுத்தார் […]
சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் அடுத்து உள்ள விளாங்குடி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக இரண்டு நாள்களுக்கு முன் நடை பெற்றது. இந்த விழாவிற்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் ,காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் கே .ஆர் ராமசாமி இருவரையும் கிராமத்தின் பொதுமக்கள் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைத்தனர். இருவரையும் சிறப்பாக வரவேற்கும் விதமாக ஐந்திற்கும் மேற்பட்ட பேனர்கள் வைத்து இருந்தார்கள்.குடமுழுக்கு விழாவிற்கு முன்தினம் இரவு அவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குடி பகுதியை சேர்ந்தவர் குமார்.இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஏமாற்றி யாருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பு திரண்டுள்ளனர்.இதை அறிந்த குமார் தப்பி ஒளிந்து கொண்டார். இதனை தொடர்ந்து உள்ளே வந்த அக்கம்பக்கத்தினர் மாணவி மீட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு […]
மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பின்னடைவு அடைந்து உள்ளனர் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழியும் சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட […]
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க.விற்கு 5 தொகுதிகள் அ.தி.மு.க ஒதுக்கியது. சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதற்காக 4 மெகாஸ்கிரீன் பிரச்சார வாகனங்கள் காரைக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க.விற்கு 5 தொகுதிகள் அ.தி.மு.க ஒதுக்கியது. […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நிறைவு புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை தொடங்கிய பேரணி பொது கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் , தலைவர்கள் பேச்சு : மாநிலங்கவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் , DYFI-யின் […]
சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், 7 தமிழர்களை விடுவிக்க கோரி சைக்கிள் பேரணி நடத்தியுள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், 7 பேர் விடுதலையை வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (23/10/18) முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். ஆண்டுதோறும் அக்டோபர் 27-ம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினம் அனுசரிக்கப்படும். அதேபோல் தேவர் ஜெயந்தி அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் நினைவுதினம் மற்றும் தேவர் குருபூஜையையொட்டி 144 தடை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இன்று (23/10/18) முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்
இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறைஅளித்து சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். DINASUVADU
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருவதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாளை அவரது 61வது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் […]
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தில் வந்த மாணவர்கள் மீது சிப்காட் சார்பு ஆய்வாளர் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்தனர். ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக அரசு திடீரென்று பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களும், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் போராடி வருகின்றனர். எனவே அரசு உடனடியாக பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆனால் கட்டண உயர்வை திரும்ப பெறுவது குறித்த மறுபரிசீலனை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்க மிக […]
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கடந்த 2 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது, ‘பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள எங்களது பெற்றோர் வருமானமே ரூ.200 தான். அதில் பாதி பஸ் கட்டணத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்களது பெற்றோர் குடும்ப […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி 40 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்து சிறப்பு தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இந்த மணல் கொள்ளையின் பின்னணி என்ன..?? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
குடிநீர் வடிகால் வாரிய சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தென்மண்டல செயலாளர்கள் ராமநாதன், சிவசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட மொத்தம் 33 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு […]