சிவகங்கை

சிவகங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! 7 ஆம் வகுப்பு மாணவன் பலி…

சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சருகனேந்தல் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 7ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. தற்போது, காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், […]

3 Min Read
school van maccident

அரசு பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து..! 3 பெண்கள் உயிரிழப்பு..!

சிவகங்கை அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் அருகே திருமாஞ்சோலை அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த மோதலில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 3 பெண்கள் விபத்து நடந்த இடத்திலேயே […]

3 Min Read
Default Image

ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு. சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2019 -இல் சங்கராபுரம் ஊராட்சி தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி இம்முடிவை ஏற்காததால், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த முறை பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. […]

4 Min Read
Default Image

திமுக ஆட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்!

இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என திமுக கவுன்சிலர் விமர்சனம். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 16-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஈஸ்வரன், பேருந்தில் இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என ஆவேசமாக பேசியதால், திமுக ஒன்றிய குழு தலைவர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் […]

#DMK 3 Min Read
Default Image

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு..!

குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை  144 தடை உத்தரவு. இந்திய விடுதலை போராட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக  போரிட்டதில், மருது சகோதரர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.செந்தில்குமார் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி […]

- 2 Min Read
Default Image

#BREAKING: கச்சநத்தம் கொலை வழக்கு – 27 பேருக்கு ஆயுள் தண்டனை!

கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு. கச்சநத்தத்தில் கடந்த 2018ல் நடந்த மோதலில் பட்டியலினத்தவர் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018ல் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலையடுத்து ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேர் குற்றாவளிகள் […]

#Murder 2 Min Read
Default Image

#Breaking:கோயிலில் முதல் மரியாதை ‘கடவுளுக்கு’ மட்டுமே நீதிமன்றம் அதிரடி!

பொதுவாக கோயில்களில் விஐபிக்கள் தரிசனம்,முக்கிய பிரமுகர்களுக்கு தனி பாதை,தனி மரியாதை ஆகியவை இருந்து வரும் நிலையில், கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே என்றும் மாறாக மனிதனுக்கு அல்ல எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சண்டிவீரன் கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அஅதில் சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது சட்டத்திற்கு எதிரானது […]

#ChennaiHC 3 Min Read
Default Image

#BREAKING: மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.!

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு. சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 7-ஆம் தேதி பனங்குடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. #BreakingNews : மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.!#TNGovt pic.twitter.com/Av2bqkA8vT — Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) April 5, 2022

#TNGovt 2 Min Read
Default Image

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 10 ஆண்டு சிறை..!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக பெருமாள் பட்டியை சேர்ந்தவர் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் குமார் என்பவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. […]

சிறை 2 Min Read
Default Image

புதிய வேளாண் கல்லூரி – நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதிதாக அரசு தோட்டக்கலை தொடங்கப்பட்டது. வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி 2021-22 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் […]

- 2 Min Read
Default Image

சத்தியமூர்த்தி பவனில் இன்று ‘ராட்சத பலூன்’ பறக்க விடும் – கே.எஸ்.அழகிரி.

சென்னை:சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று ராட்சத பலூன் பறக்க விடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு,இன்று காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ராட்சத பலூன் பறக்க விடுகிறார். இதுகுறித்து வெளியான அறிக்கையில்,”அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 75-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் […]

KS Alagiri 3 Min Read
Default Image

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தங்கை – துரிதமாக காப்பாற்றிய 14 வயது சகோதரி!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து துரிதமாக காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை எனும் பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட சிறுமியின் சகோதரியான 14 வயது தேவிஸ்ரீ எனும் சிறுமி உடனடியாக செயல்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது சகோதரியின் தலைமுடியை பிடித்து வைத்துள்ளார். அதன் பின்பாக சத்தமிட்டு […]

deep well 3 Min Read
Default Image

அகரம் அகழாய்வில் மூன்றாவது 8 அடி கொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு…!

அகரம் அகழாய்வில் மூன்றாவது முறையாக 8 அடி கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டத்தில் அகரம், கீழடி, மணலூர், கொந்தகை உள்ளிட்ட சில இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுடுமண், காதணிகள், மண்பானைகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பதாக சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது 15 சுடுமண் உறைகளுடன் கூடிய உறைகிணறும், 8 அடி நீளமுள்ள ஒரு உறைகிணறும் […]

Envelope well 2 Min Read
Default Image

சிவகங்கை மாவட்டம் இளையன்குடியில் தீ விபத்து – வீடு எரிந்து நாசம்!

சிவகங்கை மாவட்டம் இளையன்குடியில் தீ விபத்து ஏற்பட்டதில், வீடு எரிந்து நாசமடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் உள்ள கீழாயூர் காலனியை சேர்ந்த வாகித் என்பவர் வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் இன்று காலை விடிந்ததும் பால் பாக்கெட் விநியோகம் செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அப்பொழுது அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ வீடு முழுவதும் மளமளவென்று பரவியதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

#Accident 3 Min Read
Default Image

7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் கனவை நினைவாக்கிய முதல்வருக்கு நன்றி!

7.5% உள் இட ஒதுக்கீடுமூலம் மருத்துவ படிப்பில் இடம் பெற்ற சிவகங்கையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளியில் பயின்று வரக்கூடிய மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு தருவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தா நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் தற்பொழுது சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் […]

#MedicalStudents 4 Min Read
Default Image

மதுப்போதையில் காரை அதிவேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிய 6 பேர் .! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

மதுப்போதையில் காரை அதிவேகமாக ஓட்டியதால் கார் கவிழ்ந்து 6 பேர் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது . கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை பீதியடைய செய்துள்ளது . இளைஞர்கள் 6 பேர் தங்களது நண்பனின் பிறந்தநாளை மொட்டையன்வயல் என்னும் கிராமத்தில் கொண்டாடியுள்ளனர். அதனையடுத்து மதுப்போதையில் இருந்த 6 பேரும் ஒரே […]

Rashdriving 4 Min Read
Default Image

5 மாவடங்களில் கனமழை..மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே  மழை  பெய்து வருகிறது.அதே போல சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

#Rain 2 Min Read
Default Image

கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு – 2430 தொல்லியல் பொருள்கள் கண்டெடுப்பு!

கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வில் 2430 தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் சிந்து கங்கை நதிக்கரை ஓரத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட தமிழர் நாகரிகங்களை உலகறியச் செய்ய கூடிய அகழாய்வு துவங்கியது. மூன்று கட்டமாக முதலில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு தொல்லியல் பொருட்கள் கண்டறியப் பட்டது. அதை தொடர்ந்து நான்கு மற்றும் ஐந்தாம் கட்டமாக இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் துறையின் […]

Archaeological Objects 3 Min Read
Default Image

இன்றுடன் நிறைவடையும் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள்!

கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிந்து கங்கை நதிக்கரை நாகரிகங்கள் கொண்ட கீழடியில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி இதுதான். 40க்கு மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு சங்ககால பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தான் அங்கு அகழ்வாராய்ச்சி நடக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மழை […]

Bottom 3 Min Read
Default Image

சொத்து பிரச்சனை : வெட்டிய தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற கொடூர கொலையாளிகள்!

வெட்டிய தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற கொடூர கொலையாளி. சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை புதுவயல் தெருவை சேர்ந்தவர் யூசப் ரகுமான். இவர் புதுவையில் இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டணத்தில் வசிக்கும் இவரது அண்ணன் சகுபர் க்கும் இடையே இரண்டு கோடி மதிப்பிலான இடம் தொடர்பாக சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், […]

#Murder 3 Min Read
Default Image