தமிழ்நாட்டில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி விவசாயிகளின் ஒப்புதலின்றி அடாவடித்தனமாக பவர்கிரிட் கார்ப்பரேசன் செய்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு விவசாய அமைப்புகள் தலையிட்டு மின்கோபுரம் அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக மின்துறை அமைச்சரிடம் இப்பிரச்சனை தொடர்பாக, பிப்ரவரி 22ந்தேதியும், மார்ச் 6ந் தேதியும் நேரில் பேசப்பட்டது.
இத்திட்டத்தை கேபிள் மூலம் செயல்படுத்த வேண்டும். நிலத்திற்கான இழப்பீடு குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதுவரை மாநிலம் முழுவதும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தியுள்ளோம்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் மலையடிப்பட்டி என்ற கிராமத்தில் நில உரிமையாளரின் ஆட்சேபனையை மீறி காவல்துறை பாதுகாப்புடன் மின்கோபுரம் அமைக்கும் பணியை பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இன்று (22.03.2018) விவசாயிகள் திரண்டு சென்று பணிகளை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். பவர்கிரிட் நிறுவனத்தை சார்ந்த குமார் என்பவர் சுரேஷ் என்கிற விவசாயியையும், ராஜாத்தி மாதர்சங்க மாவட்ட துணை தலைவர் அவர்களையும் தகாத வார்த்தைகளால் ஏசி, காலால் எட்டி உதைத்து கீழே விழுந்ததில் காயமேற்பட்டு தற்போது மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்கியவனை கைது செய்வதற்கு பதிலாக, போராடிய விவசாயிகளை காவல்துறை கைது செய்துள்ளனர். விவசாயிகளின் ஒப்புதலில்லாமல் மின்கோபுர அமைப்பது சட்டவிரோதமானது. இந்த சட்டவிரோத செயலுக்கு காவல்துறை துணைபோனது வன்மையான கண்டனத்திற்குரியது.
விவசாயிகளை தாக்கிய குமாரை கைது செய்வதுடன் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆதரவாக சென்ற விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு, மேலும் காலதாமதம் செய்யாமல் உயர்அழுத்த மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும். அதுவரை மின்கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்திட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.
சண்முகம்
மாநிலச்செயலாளர்
அகில இந்திய விவசாயிகள் சங்கம்
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…