உடல் உறுப்புகள் விற்பனை சேலம் மணிபால் மருத்துவமனையில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
சேலத்தில் விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞர் ஸ்ரீரங்கனின் குடும்பத்தினர் சிகிச்சைக் கட்டணமான 50 ஆயிரம் ரூபாயை செலுத்த முடியாமல் தவித்த நிலையில், அவரது உடல் உறுப்புகளுக்கு மணிபால் மருத்துவமனை நிர்வாகம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்றதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவின் பேரில், சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மணிபால் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 6 பேர் குழு சென்னையில் இருந்து சேலம் வந்தனர். ஸ்ரீரங்கனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட அவர்கள், அதனைத் தொடர்ந்து மணிபால் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீரங்கனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் யார்? எத்தனை உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன? அவை யார் யாருக்கு பொறுத்தப்பட்டுள்ளன? அரசு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…