சேலத்தில் சுகாதாரத்துறை மருத்துவர் குழு மணிபால் மருத்துவமனையில் விசாரணை!

Default Image

உடல் உறுப்புகள் விற்பனை சேலம் மணிபால் மருத்துவமனையில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.

சேலத்தில் விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞர் ஸ்ரீரங்கனின் குடும்பத்தினர் சிகிச்சைக் கட்டணமான 50 ஆயிரம் ரூபாயை செலுத்த முடியாமல் தவித்த நிலையில், அவரது உடல் உறுப்புகளுக்கு மணிபால் மருத்துவமனை நிர்வாகம் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்றதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவின் பேரில், சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மணிபால் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட 6 பேர் குழு சென்னையில் இருந்து சேலம் வந்தனர். ஸ்ரீரங்கனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட அவர்கள், அதனைத் தொடர்ந்து மணிபால் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீரங்கனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் யார்? எத்தனை உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன? அவை யார் யாருக்கு பொறுத்தப்பட்டுள்ளன? அரசு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்