மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை- டாஸ்மாக் பொதுமேலாளர்…!!
சேலத்தில் மதுபான பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் பொதுமேலாளர் எச்சரித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில், சேலம் நகர்ப்பகுதியில் உள்ள மதுபான பார்களில், டாஸ்மாக் பொதுமேலாளர் முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த பாரில் ஆய்வு செய்தபோது, முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துமாறு பார் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.