சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 1020 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. 840 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் உள்ளன. இதில் இரண்டு அலகுகளில் ஏற்கனவே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட மின் […]
8 வழிச்சாலையும் வேண்டாம், 6 வழிச்சாலையும் வேண்டாம் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கடந்த பிப். மாதம் 25ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான். இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து […]
சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்த திட்டம் நிறைவேறுமா..? கடந்த பிப். மாதம் 25ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான். இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து […]
சேலத்தில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தங்களுக்கும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தினை வழங்க வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.
சுய ஆட்சி இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது! 8வழி சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க சென்ற சுய ஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்! சென்னை-சேலம் நகரங்களுக்கு இடையே 10,000 கோடி ரூபாய் செலவில் 8 வழி சாலை எனப்படும் பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது அதை […]
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவண்ணாமலை சி.நம்பியேந்தல் கிராமத்தை சேர்ந்த 10 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 105ஆம் பிரிவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் […]
சேலம் மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது .சேலம் மாவட்டத்தில் 5,000 ஆக்ரமிப்புகள் நீர்நிலை பகுதிகளில் உள்ளது, கடந்த சில மாதங்களில் 2,000 ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தலாம் உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு.. சேலத்தில் இருந்து சென்னை வரை எட்டுவழி பசுமை விரைவுச் சாலை அமைப்பதை எதிர்த்து சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.இந்த போராட்டத்தை தமிழக முழுவதும் உள்ள மக்கள் முழுமையாக ஆதரவு அளித்து வந்தனர்.போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கைது, சிறை, பொய் வழக்கு, மிரட்டல் என ஒடுக்குமுறையை மக்கள் மீது ஏவியது.. சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை […]
சேலம் : சேலம் மாநகரில் ரூ.5.07 கோடியில் செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமைவெளி பூங்காக்களை திறந்து வைக்க தமிழக முதல்வர் பழனிசாமி வருகை தந்தார்.அப்போது பசுமைவழி பூங்காக்களை திறந்து வைத்து விட்டு தமிழக முதல்வர் சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்வித் தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்…
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் திறப்பு குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.இதனால் அணையில் நீர் திறப்பும் அதிமாக திறக்கப்பட்டது.தற்போது மழையின் அளவு குறைந்து உள்ள காரணத்தினால் அணையின் நீர் மட்டமும் ,நீர் திறப்பும் படிப்படியாக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 85,000 கனஅடியில் இருந்து 75,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 85,000 கனஅடியில் […]
சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு ஆறுதல் அளிக்கிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அணுகுவோம் என்றும் தெரிவித்துள்ளார். DINASUVADU
மேட்டூர் ஆணை நீர்வரத்து சரிவு, இதனால் நீர்வரத்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி, கொள்ளளவு 93.47 டி.எம்.சி கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட, 1.43 லட்சம் நீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மெட்டோர் ஆணை நிரம்பியது. அணையில் இருந்து கடந்த 11 இரவில் அதிகபட்சமாக 1.36 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் மெட்டோர் ஆணை நீர்வரத்து […]
பெரியார் பல்கலைக்கழக நட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கு, புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது. துவக்கிவைத்து துணைவேந்தர் குழந்தைவேலு பேசியதாவது: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை ஓராண்டுக்கு தத்தெடுத்து நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் மூலம்,சுகாதார பனி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகதபாணிகளுடன் இணைந்து அம்மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். தூய்மை பாரத இயக்கத்தை தனி நபர் இயக்கமாக செயல்படுத்தும் பணியில் மாணவ மாணவிகள் ஈடுபடுவர். இரண்டு […]
பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைதூரக்கல்வி பட்டியலில் தமிழகத்தில் 3 பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் உயர்கல்வி தரத்தை கண்காணிக்க, மேம்படுத்த மத்திய அரசின் மனிதவளதுறையின் கீழ் பல்கலைக்கழக மானியக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு உயர்கல்வி மற்றும் எம்.பில்., பி.எச்.டி., உள்ளிட்ட ஆய்வு படிப்புக்கான தகுதிகள், விதிமுறைகள், அங்கீகாரம் உள்ளிட்ட வரைமுறைகள் அளிக்கப்பட்டது. அணைத்து பல்கலைக்கழகங்களும் மாநிலம் கடந்து, நாடுகள் கடந்து தொலைக்கல்வியை வழங்கி வந்தன. யு.சி.ஜி கட்டுப்பாடு: பட்டப்படிப்பு விற்பனை செய்யப்படுவதாகவும், உரிய முறையில் தேர்வு நடத்தப்படாமல் சான்றிதழ் […]
சேலம் புறநகர் மாவட்ட அம்மாபேரவைச் செயலாளர் இளங்கோவன் புத்திரகவுண்டன் பாளையம் கூட்டுறவு வங்கி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். DINASUVADU
சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -சேலம் 8 வழிச்சாலை அமைப்பதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற குள்ளம்பட்டியைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சேலம் – சென்னை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையிலிருந்து சேலத்துக்கு நடைபயணம் மேற்கொண்ட நிலையில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு போலீசார் விடுவித்தனர்.இதைத் தொடர்ந்து மீண்டும் நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் […]
சேலம் – சென்னை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் இரவு 12 மணிக்கு தொடங்கிய நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையிலிருந்து சேலத்துக்கு நடைபயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர்.சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நேற்று இரவு 10 மணிக்கு போலீசார் விடுவித்தனர்.இதைத் தொடர்ந்து மீண்டும் நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் தொடங்கினார்கள்.மேலும் இதனை தொடர்ந்து கட்சியின் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையிலிருந்து சேலத்துக்கு நடைபயணம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டனர்.சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.